உங்கள் PAN -ஐ சரிபார்க்கவும்
(PAN சரிபார்ப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது)
(PAN சரிபார்ப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது)
உங்கள் PAN -ஐ சரிபார்க்கவும் -அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. எனது PAN விவரங்களை ஏன் சரிபார்க்க வேண்டும்?
பின்வருவனவற்றிற்காக உங்கள் PAN எண்ணைச் சரிபார்க்கலாம்:
- உங்கள் PAN கார்டில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்கள், வருமான வரித் துறையின் தரவுத்தளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்துப்போகிறதா என்பதைச் சரிபார்க்கவும்
- உங்கள் PAN எண் செயல்பாட்டில் உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்.
2. PAN சரிபார்ப்பிற்கு மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் எனது அலைபேசி எண் பதிவு செய்யப்பட வேண்டுமா?
சரிபார்ப்பின் போது நீங்கள் அணுகக்கூடிய எந்தவொரு செல்லுபடியாகும் அலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம். அந்த எண்ணிற்கு OTP அனுப்பப்படும் (இது 15 நிமிடங்களுக்குச் செல்லுபடியாகும், மேலும் அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்).
3. ஒரு தனிநபர் வரி செலுத்துபவர், தனது ஒரே அலைபேசி எண்ணைப் பயன்படுத்திச் சரிபார்க்கக்கூடிய PANs எண்களுக்கு ஏதேனும் வரம்பு உள்ளதா?
ஆம். ஒரு நாளில் ஒரே அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அதிகபட்சம் 5 வெவ்வேறு PAN எண்களைச் சரிபார்க்கலாம்.
4. ஒரு வெளி நிறுவனமாக, நான் ஒரு பயனரின் PAN விவரங்களைச் சரிபார்க்க முடியுமா?
ஆம், 'PAN சரிபார்ப்பு' சேவை, வெளி அமைப்புகள் உட்பட பதிவு செய்துள்ள அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கிறது. மொத்தமாக PAN / TAN சரிபார்ப்பு என்பது வெளி அமைப்புகளுக்கான தனிச் சேவையாகும், இதற்கு வருமான வரித் துறையின் முன் அனுமதி தேவை.
5. எனது PAN விவரங்களை ஆன்லைனில் எப்படிப் பார்ப்பது?
நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்ள உங்கள் PAN எண்ணைத் தெரிந்துகொள்ளுங்கள் சேவையைப் பார்வையிடலாம். உங்கள் PAN செல்லுபடியாகுமா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்கவும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.