உடனடி e-PAN பயனர் கையேடு
1. மேலோட்ட பார்வை
உடனடி e-PAN சேவை அனைத்து தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கும் கிடைக்கிறது, அவர்களுக்கு நிரந்தர கணக்கு எண் (PAN) ஒதுக்கப்படவில்லை, ஆனால் ஆதார் உள்ளது. இது ஒரு உள்நுழைவுக்கு முந்தைய சேவையாகும், இதில் நீங்கள்:
- மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்ட PAN ஐ மின்னணு வடிவத்தில் (ஆதார் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணின் உதவியுடன்), இலவசமாகப் பெறுங்கள்
- ஆதார் e-KYC படி PAN விவரங்களைப் புதுப்பிக்கவும்,
- PAN ஒதுக்கிடுதல் / புதுப்பிற்குப் பிறகு e-KYC விவரங்களின் அடிப்படையில் மின்னணு-தாக்கல் கணக்கை உருவாக்குங்கள்.
- நிலுவையுள்ள e-PAN கோரிக்கையின் நிலையைச் சரிபாருங்கள் / மின்னணு-தாக்கல் முகப்பு பக்கத்தில் உள்நுழைந்த பிறகு அல்லது முன்பு e-PAN ஐப் பதிவிறக்குங்கள்.
2. இந்த சேவையை பெறுவதற்கான முன் தேவைகள்
- இதுவரை PAN ஒதுக்கப்படாத தனிநபர்.
- பயன்பாட்டில் உள்ள ஆதார் எண் மற்றும் ஆதார் என்னுடன் இணைக்கப்பட்ட பயன்பாட்டில் உள்ள அலைபேசி எண்
- கோரிக்கை விடுத்த தேதியில் விண்ணப்பதாரர்/பயனர் சிறாராக இருக்கக் கூடாது; மற்றும்
- வருமானவரிச் சட்டம் பிரிவு 160 இன் கீழ் வரி செலுத்துபவரின் பிரதிநிதி என்ற வரையறைக்குள் வராத நபர்.
3. படிப்படியான வழிகாட்டி
3.1 புதிய e-PAN ஐ உருவாக்கவும்
படி 1: மின்னணு-தாக்கலிற்கான இணையமுகப்புப் பக்கத்திற்குச் சென்று, உடனடி e-PAN என்பதை கிளிக் செய்யவும்.

படி 2: e-PAN பக்கத்தில், புதிய e-PAN பெறு என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: புதிய e-PAN பெறுதல் பக்கத்தில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, நான் அதை உறுதிப்படுத்துகிறேன் என்ற தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு:
- ஆதார் ஏற்கனவே செல்லுபடியாகும் PAN உடன் இணைக்கப்பட்டிருந்தால், பின்வரும் செய்தி காட்டப்படும் - உள்ளிடப்பட்ட ஆதார் எண் ஏற்கனவே ஒரு PAN உடன் இணைக்கப்பட்டுள்ளது.
- ஆதார் எந்தவொரு அலைபேசி எண்ணுடனும் இணைக்கப்படவில்லை என்றால், பின்வரும் செய்தி காட்டப்படும் - உள்ளிடப்பட்ட ஆதார் எண் எந்தவொரு செயலில் உள்ள அலைபேசி எண்ணுடனும் இணைக்கப்படவில்லை.
படி 4: OTP சரிபார்ப்பு பக்கத்தில், நான் ஒப்புதல் விதிமுறைகளைப் படித்தேன் என்பதை கிளிக் செய்து மேலும் தொடர ஒப்புக்கொள்கிறேன். தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: OTP சரிபார்ப்பு பக்கத்தில், ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு, UIDAI உடன் ஆதார் விவரங்களை சரிபார்க்க தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு:
- OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் உள்ளன.
- திரையில் உள்ள OTP காலாவதி கணக்கிடு நேரம் காட்டி உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
- OTP ஐ மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்த பின், புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
படி 6: ஆதார் விவரங்களை சரிபார்க்கும் பக்கத்தில், அந்த தேர்வுப்பெட்டியை நான் ஏற்கிறேன் என்பதைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு:
- மின்னஞ்சல் ID ஐ [உங்கள் ஆதரவுடன் பதிவுசெய்யப்பட்டது] இணைப்பது / சரிபார்ப்பது உங்கள் விருப்பதைப் பொறுத்ததாகும்.
- ஆதாரில் உங்கள் மின்னஞ்சல் ID ஐப் புதுப்பித்திருந்தாலும் அது சரிபார்க்கப்படவில்லை என்றால், மின்னஞ்சலைச் சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்யவும். செல்லுபடியாகும் மின்னஞ்சல் ID பக்கத்தில், ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணில் பெறப்பட்ட 6-இலக்க OTP ஐ உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
- ஆதாரில் உங்கள் மின்னஞ்சல் ID ஐ புதுப்பிக்கவில்லை என்றால், மின்னஞ்சல் ID ஐ இணைக்கவும் என்பதை கிளிக் செய்யவும். மின்னஞ்சல் ID ஐ சரிபார்க்கவும் பக்கத்தில், ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு, தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
வெற்றிகரமான சமர்பிப்பிற்குப் பிறகு, ஒப்புதல் எண்ணுடன் ஒரு வெற்றிச் செய்தியும் காண்பிக்கப்படும். எதிர்கால உபயோகத்திற்காக ஒப்புதல் ID ஐ குறித்து வைக்கவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணுக்கு ஒரு உறுதிப்படுத்துதல் செய்தியும் பெறுவீர்கள்.

3.2 ஆதார் e-KYC மூலம் PAN விவரங்களைப் புதுப்பிக்கவும்.
படி 1: மின்னணு-தாக்கலிற்கான இணைய முகப்புப் பக்கத்திற்குச் சென்று, உடனடி e-PAN என்பதை கிளிக் செய்யவும்.

படி 2: e-PAN பக்கத்தில், PAN புதுப்பிப்பு என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: PAN புதுப்பிப்பு விவரங்கள் பக்கத்தில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, நான் அதை உறுதிப்படுத்துகிறேன் என்ற தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு:
- ஆதார் ஏற்கனவே செல்லுபடியாகும் PAN உடன் இணைக்கப்பட்டிருந்தால், பின்வரும் செய்தி காட்டப்படும் - உள்ளிடப்பட்ட ஆதார் எண் ஏற்கனவே ஒரு PAN உடன் இணைக்கப்பட்டுள்ளது.
- ஆதார் எந்தவொரு அலைபேசி எண்ணுடனும் இணைக்கப்படவில்லை என்றால், பின்வரும் செய்தி காட்டப்படும் - உள்ளிடப்பட்ட ஆதார் எண் எந்தவொரு செயலில் உள்ள அலைபேசி எண்ணுடனும் இணைக்கப்படவில்லை.
படி 4: OTP சரிபார்ப்பு பக்கத்தில், ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு:
- OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் உள்ளன.
- திரையில் உள்ள OTP காலாவதி கணக்கிடு நேரம் காட்டி உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
- OTP ஐ மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்த பின், புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
படி 5: OTP சரிபார்க்கப்பட்ட பிறகு, ஆதார் e-KYC விவரங்கள் மற்றும் PAN உடன் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் காண்பிக்கப்படும். ஆதார் விவரங்களின்படி புதுப்பிக்கப்பட வேண்டிய அந்தந்த தேர்வுப்பெட்டிகளைக் கிளிக் செய்வதன் மூலம் ஆதார் e-KYC படி புதுப்பிக்க வேண்டிய விவரங்களைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

ஆதார் விவரங்களின்படி பின்வரும் விவரங்களை மட்டுமே புதுப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்க:
- புகைப்படம்
- பெயர்
- பிறந்த தேதி (உங்கள் PAN இல் பிறந்த ஆண்டு மட்டுமே இருந்தால், அதை PAN இல் புதுப்பிப்பு செய்வதற்கு முன்பு ஆதாரில் புதுப்பிக்க வேண்டும்).
- அலைபேசி எண் (இது இயல்பாகவே புதுப்பிப்பு செய்யப்படுகிறது)
- மின்னஞ்சல் ID (PAN விவரங்களில் புதுப்பிப்பு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID ஐ நீங்கள் சரிபார்க்க வேண்டும்)
- முகவரி
படி 6: ஆதார் விவரங்களின்படி நீங்கள் புதுப்பிக்க விரும்பும் அனைத்து விவரங்களையும் தேர்ந்தெடுத்த பிறகு, உறுதிப்படுத்து என்பதை கிளிக் செய்யவும்.

உறுதிப்படுத்தலுக்குப் பிறகு ஒப்புதல் எண்ணுடன் ஒரு வெற்றிச் செய்தியும் காண்பிக்கப்படும். ஒப்புதல் ID ஐ எதிர்கால குறிப்பிற்காக குறித்து வைக்கவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID க்கு ஒரு உறுதிசெய்யும் செய்தியையும் பெறுவீர்கள்.

3.3 நிலுவையில் உள்ள e-PAN கோரிக்கையின் நிலையை சரிபார்க்கவும் / மின்னணுத் தாக்கலிற்கான இணைய முகப்பின் கணக்கை உருவாக்கவும் / e-PAN ஐ பதிவிறக்கவும்
படி 1: மின்னணு-தாக்கலிற்கான இணைய முகப்புப் பக்கத்திற்குச் சென்று, உடனடி e-PAN என்பதை கிளிக் செய்யவும்.

படி 2: e-PAN பக்கத்தில், சரிபார்ப்பு நிலை/பதிவிறக்க PAN விருப்பத்தைத் தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: சரிபார்ப்பு நிலை / பதிவிறக்க PAN பக்கத்தில், உங்கள் 12 இலக்க ஆதாரை உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

படி 4: OTP சரிபார்ப்பு பக்கத்தில், ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு:
- OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் உள்ளன.
- திரையில் உள்ள OTP காலாவதி கணக்கிடு நேரம் காட்டி உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
- OTP ஐ மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்த பின், புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
படி 5: உங்கள் e-PAN கோரிக்கை பக்கத்தின் தற்போதைய நிலையில், உங்கள் e-PAN கோரிக்கையின் நிலையை நீங்கள் பார்க்க முடியும். புதிய e-PAN உருவாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டால், ஒரு நகலைப் பதிவிறக்க e-PAN பார்க்க அல்லது பதிவிறக்க e-PAN ஐ கிளிக் செய்யவும். மின்னணு-தாக்கலிற்கான இணைய முகப்பில் பதிவு செய்ய மின்னணு-தாக்கல் கணக்கை உருவாக்கு என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு: உங்கள் மின்னஞ்சல் முகவரியை (உங்கள் ஆதார் KYC இன் படி) சரிபார்க்கவில்லை என்றால், அல்லது PAN விவரங்களைப் புதுப்பிக்கும்போது அல்லது பதியும்போது அவ்வாறு செய்வது கட்டாயமாகும்.
3.4 e-PAN ஐ உள்நுழைவுக்குப் பிறகு - பதிவிறக்கவும்
படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

குறிப்பு: e-PAN பெற்ற பிறகு நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உங்களைப் பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமான பதிவுக்குப் பிறகு மட்டுமே, நீங்கள் இணைய முகப்பில் (போர்ட்டலில்) உள்நுழைய முடியும். மேலும் அறிய மின்னணு-தாக்கல் (வரி செலுத்துபவர்) பதிவு செய்தல் பயனர் கையேட்டிற்குச் செல்லவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையில், சேவைகள் > காண்க / e-PAN பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: ஆதார் எண்ணை உள்ளிடு பக்கத்தில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

படி 4: OTP சரிபார்ப்பு பக்கத்தில், ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு:
- OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் உள்ளன.
- திரையில் உள்ள OTP காலாவதி கணக்கிடு நேரம் காட்டி உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
- OTP ஐ மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்த பின், புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
படி 5: e-PAN ஐ பார்க்க / பதிவிறக்கவும் பக்கத்தில், உங்கள் e-PAN கோரிக்கையின் நிலையைப் பார்க்க முடியும். புதிய e-PAN உருவாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டால், ஒரு நகலைப் பதிவிறக்க e-PAN ஐ பார்க்கவும் என்பதில் e-PAN ஐ பார்க்க / பதிவிறக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.

4. தொடர்புடைய தலைப்புகள்
- மின்னணு-தாக்கலுக்கு பதிவு செய்யவும் [வரி செலுத்துபவர்].
- முகப்புப் பலகை மற்றும் பணிப்பட்டியல்
- உள்நுழை
- உங்கள் PANஐ சரிபார்க்கவும்
- ஆதாரை இணைக்கவும்
- உங்கள் PAN ஐ தெரிந்து கொள்ளவும்