Do not have an account?
Already have an account?

1. கண்ணோட்டம்

வாடிக்கையாளர்களைச் சேர் சேவை அனைத்து வகை 1 & வகை 2 பதிவு செய்யப்பட்ட மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ERI) பயனர்களுக்கும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கிறது. இந்தச் சேவையுடன், நீங்கள் பதிவு செய்யப்பட்ட நிரந்தர கணக்கு எண் (PAN) பயனர்களையும் பதிவு செய்த மூலத்தில் வரி பிடித்தல் எண் (TAN) பயனர்களையும் வாடிக்கையாளர்களாகப் பதிவு செய்து வருமான வரி அறிக்கை மற்றும் படிவங்களை தாக்கல் செய்வது உட்பட, அவர்களின் சார்பாகச் சில செயல்களைச் செய்ய முடியும்.

கூடுதலாக, (வகை 1 & வகை 2) மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ERI)கள் வரி செலுத்துவோர் பதிவு செய்யப்படாவிட்டால், வாடிக்கையாளர்களாக சேர்க்கும்போது வரி செலுத்துவோரை (நிரந்தர கணக்கு எண் (PAN) பயனர்கள் மட்டுமே) மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யலாம்.
இந்தச் சேவையின் மூலம், (வகை 1 & வகை 2) மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ERI க்)கள் செயலில் / செயலற்ற வாடிக்கையாளர்களின் விவரங்களை மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் ( உள்நுழைவுக்குப் பின் ) காண முடியும்.

உங்கள் வாடிக்கையாளரை வெற்றிகரமாகச் சேர்த்த பிறகு, உங்கள் சேர்க்கப்பட்ட வாடிக்கையாளரின் சார்பாக பின்வரும் செயல்பாடுகளை நீங்கள் செய்ய முடியும்:

  • படிவம் 26AS, வருடாந்திர தகவல் அறிக்கையைக் காண்க
  • வருமான வரி விவர அறிக்கைகளை/படிவங்களைப் பார்க்கவும் மற்றும் தாக்கல் செய்யவும்
  • தன்விவர விவரங்களைப் பார்க்கவும் / புதுப்பிக்கவும்
  • அறிவிப்புகளைக் காண்க
  • நிலுவையில் உள்ள வரிக் கோரிக்கைக்கு பதிலளிக்கவும்
  • திருத்த நிலையைக் காண்க
  • வரி வரவு பொருந்தவில்லை விவரங்களைக் காண்க
  • சேவை கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் (திரும்பப் பெற வேண்டிய வரித் தொகையை மீண்டும் வழங்குக / தாமதத்தை மன்னிக்கவும்)
  • குறைகளைச் சமர்ப்பிக்கவும், அவற்றின் நிலையைக் காணவும்
  • மின்னணு தாக்கல் இணைய முகப்பு மூலம் வருமான வரி செலுத்தவும்.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்

  • மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனர்
  • செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள நிரந்தர கணக்கு எண் (PAN)
  • அவரை / அவர்களை வாடிக்கையாளராக சேர்ப்பதற்கு முன் வரி செலுத்துவோரிடமிருந்து ஒப்புதல்.

பொதுவான முன் நிபந்தனைகளைத் தவிர, வாடிக்கையாளர்களாகச் சேர்க்கப்பட வேண்டிய வரி செலுத்துவோர் வகையின் அடிப்படையில் பின்வரும் முன் நிபந்தனைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

வரிசை எண். விவரம் முன்நிபந்தனைகள்
1. நிரந்தர கணக்கு எண் (PAN) பயனர்களை வாடிக்கையாளர்களாகச் சேர்ப்பது
  • வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளார், மேலும் நிரந்தர கணக்கு எண் (PAN) செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ளது
  • வரி செலுத்துவோர் வேறு எந்த மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ERI) க்கும் செயலில் உள்ள வாடிக்கையாளர் அல்ல
  • வரி செலுத்துவோருக்கு செல்லுபடியாகும் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது
  • வரி செலுத்துவோர் உள்நாட்டில் வசிப்பவர்.
  • வரி செலுத்துவோரின் அடிப்படைத் தகவல் மற்றும் தொடர்பு விவரங்கள் உங்களிடம் உள்ளன (பதிவு செய்யப்படாத வரி செலுத்துவோரை உங்கள் வாடிக்கையாளராகச் சேர்க்க வேண்டுமானால்)
2. மூலத்தில் வரி பிடித்தல் எண் (TAN) பயனர்களை வாடிக்கையாளர்களாகச் சேர்ப்பது
  • மூலத்தில் வரி பிடித்தல் எண் (TAN) பயனர் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளார்
  • மூலத்தில் வரி பிடித்தல் (TDS) தொடர்பான படிவங்களின் தரவு பரிமாற்ற சோதனைகளை மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகரால் (ERI) வெற்றிகரமாக முடித்து விட்டது, மற்றும் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


3. படிப்படியான வழிகாட்டி

3.1 பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரை வாடிக்கையாளர்களாக சேர்க்கவும்
3.2 பதிவு செய்யப்படாத வரி செலுத்துவோரை வாடிக்கையாளர்களாகச் சேர்க்கவும்
3.3 மூலத்தில் வரி பிடித்தல் எண் (TAN) பயனர்களை வாடிக்கையாளர்களாகச் சேர்க்கவும்

3.1. பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரை வாடிக்கையாளர்களாகச் சேர்க்கவும்

படி 1: பயனர் அடையாளம் (ID) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

படி 1


படி 2: உங்கள் முகப்புப்பெட்டியில், வாடிக்கையாளரை நிர்வகி > எனது வாடிக்கையாளர் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

படி 2


படி 3: எனது வாடிக்கையாளர் பக்கத்தில், செயலில் உள்ள மற்றும் செயலற்ற வாடிக்கையாளர் விவரங்களின் விவரங்களை நீங்கள் காணலாம். உங்கள் வாடிக்கையாளராக வரி செலுத்துவோரைச் சேர்க்க வாடிக்கையாளரைச் சேர் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

படி 3


படி 4: வாடிக்கையாளரைச் சேர் பக்கத்தில், வரி செலுத்துவோரின் நிரந்தர கணக்கு எண் (PAN) உள்ளிட்டு, பிறந்த தேதி / இணைக்கப்பட்ட தேதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து சரிபார்ப்பு என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

படி 4


படி 5: உள்ளிட்ட விவரங்களை வெற்றிகரமாகச் சரிபார்த்த பிறகு, சேர்க்கப்பட்ட வாடிக்கையாளர் சார்பாக அணுகக் கூடிய விவரங்கள் மற்றும் சேவைகளை மதிப்பாய்வு செய்யவும்.

படி 5


படி 6: வாடிக்கையாளரைச் சேர் பக்கத்தில், செல்லுபடியாகும் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும் (செல்லுபடியாகும் தொடக்கத் தேதி மற்றும் செல்லுபடியாகும் இறுதித் தேதி வரை தேர்ந்தெடுப்பதன் மூலம்) மற்றும் வரி செலுத்துவோரிடமிருந்து (வாடிக்கையாளர்) கையொப்பமிடப்பட்ட ஒப்புதலை நான் பெற்றுள்ளேன் என்பதைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

படி 6


படி 7: கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, பரிவர்த்தனை அடையாளத்துடன் (ID உடன்) வெற்றிச் செய்தி காட்டப்படும். எதிர்கால குறிப்புக்காக பரிவர்த்தனை அடையாளத்தை (ID - ஐ) நீங்கள் குறித்துக் கொள்ளலாம். இணைய முகப்பு மூலம் கோரிக்கையைச் சரிபார்க்க மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் மின்னஞ்சல் முகவரி (ID) மற்றும் அலைபேசி எண்ணுக்குக் கோரிக்கை அனுப்பப்படும். வரி செலுத்துவோரின் ஒப்புதலுக்குப் பிறகு, அவர்/அவர்கள் உங்களுக்கான வாடிக்கையாளராக சேர்க்கப்படுவார்.

படி 7

3.2. பதிவு செய்யப்படாத வரி செலுத்துவோரை வாடிக்கையாளர்களாகச் சேர்க்கவும்

படி 1: பயனர் அடையாளம் (ID) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

3.2 படி 1


படி 2: உங்கள் முகப்புப்பெட்டியில், வாடிக்கையாளரை நிர்வாகி > எனது வாடிக்கையாளர் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

3.2 படி 2


படி 3: எனது வாடிக்கையாளர் பக்கத்தில், செயலில் உள்ள மற்றும் செயலற்ற வாடிக்கையாளர் விவரங்களின் விவரங்களை நீங்கள் காணலாம். உங்கள் வாடிக்கையாளராக வரி செலுத்துவோரைச் சேர்க்க வாடிக்கையாளரைச் சேர் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

3.2 படி 3


படி 4: விவரங்கள் சரிபார்ப்பு பக்கத்தில், வரி செலுத்துவோரின் நிரந்தர கணக்கு எண் (PAN) ஐ உள்ளிட்டு, பிறந்த தேதி / இணைக்கப்பட்ட தேதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு பிழை செய்தி மின்னணு தாக்கலில் பதிவு செய்யப்படாத வரி செலுத்துவோர் பக்கத்தில் தோன்றும். வரி செலுத்துவோரை உங்கள் வாடிக்கையாளராகச் சேர்க்கும் முன் நீங்கள் அவரை/அவர்களைப் பதிவு செய்ய வேண்டும். இப்போது பதிவு செய்க என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

3.2 Step4


படி 5: அறிவிப்பு பக்கத்தில், சேர்க்கப்பட்ட வாடிக்கையாளரின் சார்பாக அணுகக் கூடிய சேவைகளை மதிப்பாய்வு செய்யவும். செல்லுபடியாகும் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும் (செல்லுபடியாகும் தொடக்கத் தேதி மற்றும் முடிவுத் தேதிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்) மற்றும் வரி செலுத்துவோரிடமிருந்து (வாடிக்கையாளர்) கையொப்பமிடப்பட்ட ஒப்புதலை நான் பெற்றுக் கொண்டேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும், தொடரவும் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

3.2 படி 5


படி 6: பதிவு பக்கத்தில், பெயர் மற்றும் பிறந்த தேதி / இணைக்கப்பட்ட தேதி (நிரந்தர கணக்கு எண் (PAN) அடிப்படையில்) அடிப்படை விவரங்களில் முன்னதாக நிரப்பப்படும். பாலினம் மற்றும் குடியுரிமை நிலையைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்க.

3.2 படி 6


படி 7: பதிவு பக்கத்தில், தொடர்பு விவரங்கள் / முதன்மை தொடர்பு விவரங்கள் (உள்ளிடப்பட்ட PAN வகையைப் பொறுத்து) அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (ID) மற்றும் அஞ்சல் முகவரி விவரங்களை உள்ளிட்டு தொடரவும் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

3.2 படி 7


படி 8: கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, பரிவர்த்தனை அடையாளத்துடன் (ID உடன்) வெற்றிச் செய்தி காட்டப்படும். எதிர்கால குறிப்புக்காக பரிவர்த்தனை அடையாளத்தை (ID - ஐ) நீங்கள் குறித்துக் கொள்ளலாம். இணைய முகப்பு மூலம் கோரிக்கையைச் சரிபார்க்க மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் மின்னஞ்சல் முகவரி (ID) மற்றும் அலைபேசி எண்ணுக்குக் கோரிக்கை அனுப்பப்படும். வரி செலுத்துவோரின் ஒப்புதலுக்குப் பிறகு, அவர்/அவர்கள் உங்களுக்கான வாடிக்கையாளராக சேர்க்கப்படுவார்.

3.2 படி 8


3.3. மூலத்தில் வரி பிடித்தல் எண் (TAN) பயனர்களை வாடிக்கையாளர்களாகச் சேர்க்கவும்

படி 1: உங்கள் பயனர் அடையாளம் (ID) மற்றும் கடவுச்சொல்லுடன் மின்னணு தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

3.3 படி 1


படி 2: உங்கள் முகப்புப்பெட்டியில், வாடிக்கையாளரை நிர்வகி > எனது வாடிக்கையாளர் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

3.3 படி 2


படி 3: எனது வாடிக்கையாளர் பக்கத்தில், செயலில் உள்ள மற்றும் செயலற்ற வாடிக்கையாளர் விவரங்களின் விவரங்களை நீங்கள் காணலாம். உங்கள் வாடிக்கையாளராக வரி செலுத்துவோரைச் சேர்க்க வாடிக்கையாளரைச் சேர் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்க.

3.3 படி 3


படி 4: வாடிக்கையாளரைச் சேர் பக்கத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர் வகையின் கீழ் மூலத்தில் வரி பிடித்தல் எண் (TAN) ஐத் தேர்ந்தெடுத்து, நிறுவனத்தின் மூலத்தில் வரி பிடித்தல் எண் (TAN) ஐ உள்ளிட்டு, மூலத்தில் வரி பிடித்தல் எண் (TAN) ஒதுக்கீட்டின் தேதியைத் தேர்ந்தெடுத்து சரிபார்ப்பு என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்க.

3.3 படி 4


படி 5: வாடிக்கையாளரைச் சேர் பக்கத்தில், சேர்க்கப்பட்ட வாடிக்கையாளரின் சார்பாக அணுகக் கூடிய சேவைகளை மதிப்பாய்வு செய்யவும். செல்லுபடியாகும் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும் (செல்லுபடியாகும் தொடக்கத் தேதி மற்றும் முடிவுத் தேதிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்) மற்றும் வரி செலுத்துவோரிடமிருந்து கையொப்பமிடப்பட்ட ஒப்புதலை நான் பெற்றுக் கொண்டேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும், தொடரவும் என்பதை சொடுக்கல் (கிளிக்) செய்யவும்.

3.3 படி 5


படி 6: கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, பரிவர்த்தனை அடையாளத்துடன் (ID உடன்) வெற்றிச் செய்தி காட்டப்படும். எதிர்கால குறிப்புக்காக பரிவர்த்தனை அடையாளத்தை (ID - ஐ) நீங்கள் குறித்துக் கொள்ளலாம். இணைய முகப்பு மூலம் கோரிக்கையைச் சரிபார்க்க மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் மின்னஞ்சல் முகவரி (ID) மற்றும் அலைபேசி எண்ணுக்குக் கோரிக்கை அனுப்பப்படும். வரி செலுத்துவோரின் ஒப்புதலுக்குப் பிறகு, அவர்/அவர்கள் உங்களுக்கான வாடிக்கையாளராக சேர்க்கப்படுவார்.

3.3 படி 6

 

4. தொடர்புடைய தலைப்புகள்