1. மேலோட்ட பார்வை
மொத்த வருமானத்திலிருந்து வருமானவரி ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் வரி செலுத்துபவர் ஈட்டிய மொத்த வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இருப்பினும், குறிப்பிட்ட நிதியாண்டிற்கான வருமானம் சம்பளத்தின் தன்மையில் முன்கூட்டிய தொகை அல்லது நிலுவைத் தொகையை உள்ளடக்கியிருந்தால், வருமான வரிச் சட்டம் வரிப் பொறுப்பின் கூடுதல் சுமைக்கு நிவாரணத்தை (89 பிரிவின் கீழ்) அனுமதிக்கிறது.
அத்தகைய நிவாரணத்தைப் பெற படிவம் 10E தாக்கல் செய்யப்பட வேண்டும். வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்வதற்கு முன் படிவம் 10E ஐத் தாக்கல் செய்வது நல்லது. இந்த படிவம் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் தாக்கல் செய்ய கிடைக்கிறது. படிவம் 10E தாக்கல் செய்யப்படாவிட்டால், வரி செலுத்துபவர் பிரிவு 89 இன் கீழ் நிவாரணம் கோரினால், தாக்கல் செய்யப்பட்ட ITR செயல்படுத்தப்படும், ஆனால் கோரப்பட்ட நிவாரணம் அனுமதிக்கப்படாது. முன்கூட்டியே பெறப்பட்ட / நிலுவைத் தொகையாக பெறப்பட்ட சம்பள வருமானத்திற்கு வரி நிவாரணம் கோரப் படிவம்-10E ஐத் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே படிவம் 10E ஐ சமர்ப்பிக்க முடியும்.
2. இந்த சேவையை பெறுவதற்கான முன் தேவைகள்
- நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்த பயனராக இருக்க வேண்டும்
- வரி செலுத்துபவரின் PAN இன் நிலை "செயலில்" இருக்க வேண்டும்
3. படிவத்தைப் பற்றி
3.1 நோக்கம்
வருமானவரிச் சட்டம் பிரிவு-89 ஒரு வரி செலுத்துபவரால் ஒரு மதிப்பீட்டாண்டுக்கு தொடர்புடைய முந்தைய நிதியாண்டில் முன்கூட்டியே பெறப்பட்ட ஊதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்திற்கு பதிலாக எந்தவொரு ஊதியம் அல்லது தற்போதைய அல்லது முந்தைய முதலாளியிடமிருந்து சம்பளத்திற்கு மேலாக பெறப்படும் தொகைக்கும் நிவாரணம் வழங்குகிறது. மதிப்பீட்டாண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த வருமானம் மதிப்பிட்டிருக்கக் கூடியதை விட அதிக விகிதத்தில் இருப்பதால் இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. படிவம்-10E-ல் உங்கள் வருமானத்தின் விவரங்களை அளிப்பதன் மூலம் அத்தகைய நிவாரணத்தை நீங்கள் கோரலாம்.
3.2 இதை யார் பயன்படுத்தலாம்?
வருமானவரித் துறையின் மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தனிநபர் பயனர்களும் வருமானவரிச் சட்டம், 1961-ன் பிரிவு-89-ன்படி நிவாரணம் கோருவதற்காக, மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் அவர்களின் வருமான விவரங்களை படிவம்-10E-யை தாக்கல் செய்யலாம்.
3.3 படிவம் ஒரு கண்ணோட்டம்:
படிவம்-10E-ல் ஏழு பகுதிகள் உள்ளன:
- இணைப்பு I – நிலுவை ஊதியம்/குடும்ப ஓய்வூதியம் நிலுவையில் பெறப்பட்டது
- இணைப்பு I - ஊதியம்/குடும்ப ஓய்வூதியம் முன்கூட்டியே பெறப்பட்டது
- இணைப்பு II & IIA – கடந்தகால சேவைகளுக்கான பணிக்கொடையின் செலுத்தல்
- இணைப்பு III – 3 ஆண்டுகளுக்கு மிகாமல் தொடர்ச்சியாக பணியாற்றிய பிறகு பணி நீக்கம் செய்யப்படும் போது அல்லது 3 ஆண்டுகளுக்கு குறையாத பணிக்காலத்தின் காலாவதியாகாத பகுதிக்கு குறையாமல் இருக்கும் பட்சத்தில் பணி வழங்குபவர் அல்லது முந்தைய பணி வழங்கியவரிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை வழங்குதல்.
- இணைப்பு IV – தொகுப்பு ஓய்வூதியம்
பெறப்பட்ட தொகையின் மேற்குறிப்பிட்ட வகையின் அடிப்படையில், படிவம் 10E-யைத் தாக்கல் செய்யும் போது பொருத்தமான இணைப்பு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
4. படிப்படியான வழிகாட்டி
படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல் மூலம் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படி 3 : மின்னணு-கோப்பு >வருமானவரி படிவங்கள் >வருமானவரி படிவங்களை தாக்கல் செய்யவும்
படி 4 : படிவம் 10E ஐ தேர்ந்தெடுக்கவும்/தேடவும்
படி 5: மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: தொடங்குவோம் என்பதை கிளிக் செய்யவும்
படி 7 : வருமான விவரங்கள் தொடர்பான பொருந்தக்கூடிய உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கவும்
படி 8: தனிப்பட்ட தகவலை உறுதிசெய்து, "சேமி" என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு : குடியுரிமை நிலை உட்பட "எனது சுயவிவரம்" பிரிவின் கீழ் அனைத்து கட்டாய விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். "எனது சுயவிவரம்" என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொடர்பு விவரங்கள் மற்றும் குடியுரிமை நிலையை மாற்றலாம்.
படி 9.1.a : தனிநபர் தகவல் தாவல் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, நிலுவை ஊதியம்/குடும்ப ஓய்வூதியம் என்பதை கிளிக் செய்யவும் (உங்களுக்கு பொருந்தினால்)
படி 9.1.b: இந்த பகுதியில் நிலுவையில் பெற்ற ஊதியம்/குடும்ப ஓய்வூதியத்தின் பொதுவான விவரங்கள் உள்ளன.
விவரங்களை உள்ளிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்
"நிலுவையில் பெறப்பட்ட சம்பளம்/குடும்ப ஓய்வூதியம்" என்ற புலத்தில் உள்ள விவரங்கள், அட்டவணை A இல் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வரிசை எண் 6க்குப் பிறகு சேர்க்கப்படும். "வெவ்வேறு முந்தைய ஆண்டுகள் தொடர்பான நிலுவையில் பெறப்பட்ட ஊதியம்/குடும்ப ஓய்வூதியத்தின் விவரங்கள்".
படி 9.2.a : நிலுவை ஊதிய தாவல் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, ஊதிய முன்பணம் என்பதை கிளிக் செய்யவும் (உங்களுக்கு பொருந்தினால்)
படி 9.2.b: இந்த பகுதியில் முன்கூட்டியே பெறப்பட்ட ஊதியம்/குடும்ப ஓய்வூதியத்தின் பொதுவான விவரங்கள் உள்ளன.
விவரங்களை உள்ளிட்டு சேமிஎன்பதைக் கிளிக் செய்யவும்
"முன்கூட்டியே பெறப்பட்ட சம்பளம்" என்ற புலத்தில் உள்ள விவரங்கள், அட்டவணை A இல் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வரிசை எண் 6க்குப் பிறகு சேர்க்கப்படும். "வெவ்வேறு முந்தைய ஆண்டுகள் தொடர்பாக முன்கூட்டியே பெறப்பட்ட ஊதியம்/குடும்ப ஓய்வூதியத்தின் விவரங்கள்".
படி 9.3.a : ஊதிய முன்பணத் தாவல் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, பணிக்கொடை மீது கிளிக் செய்யவும் (உங்களுக்கு பொருந்தினால்)
படி 9.3.b : இந்தப் பகுதியில், கடந்தகால சேவைகளுக்காக பணியமர்த்துபவரால் செலுத்தப்பட்ட பணிக்கொடையின் பொதுவான விவரங்கள் உள்ளன.
விவரங்களை உள்ளிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்
படி 9.4.a : பணிக்கொடைத் தாவல் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இந்தத் தாவலில் 'பணி நீக்கத்தின் மீதான இழப்பீடு' என்பதை கிளிக் செய்யவும் (உங்களுக்கு பொருந்தினால்)
படி 9.4.b : 3 ஆண்டுகளுக்கு மிகாமல் தொடர்ச்சியான சேவைக்குப் பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டபிறகு அல்லது பணி நீக்கம் செய்யப்படபோது பணிக்காலத்தின் மீதமிருக்கும் காலம் 3 ஆண்டுகளுக்குக் குறையாமல் இருக்கும் போது தற்போதைய மற்றும் முந்தைய பணி வழங்குபவரிடமிருந்து இழப்பீடாகப் பெற்ற பணத்தின் பொதுவான விவரங்களை இந்தப் பகுதி கொண்டுள்ளது.
பணி நீக்கம் குறித்த இழப்பீடு விவரங்களை உள்ளிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்
படி 9.5.a : பணி நீக்கத்தினால் பெற்ற இழப்பீடு தாவல் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, தொகுப்பு ஓய்வூதியத்தின் தாவலை கிளிக் செய்யவும் (உங்களுக்கு பொருந்தினால்)
படி 9.5.b: இந்தப் பகுதியில், தொகுப்பு ஓய்வூதியத்தில் பணம் செலுத்துதல் பற்றிய பொதுவான விவரங்கள் உள்ளன.
தொகுப்பு ஓய்வூதியத் தாவலுக்கான விவரங்களை உள்ளிட்டு சேமிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்
படி 10: தொகுப்பு ஓய்வூதியத் தாவல் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, சரிபார்ப்பு தாவலை கிளிக் செய்யவும்
படி 11 : தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து, இடத்தை உள்ளிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்
படி 12: அனைத்து தாவல்களும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. முன்னோட்டத்தை கிளிக் செய்யவும்
படி 13 : இது படிவத்தின் முன்னோட்டம். முன்னோட்டத்தில் விவரங்கள் சரியாக இருந்தால், மின்னனு-சரிபார்த்தலுக்கு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும், இல்லையெனில் விவரங்களைத் திருத்தலாம்.
படி 14 : சரிபார்ப்பின் எந்த முறையிலும் படிவத்தை மின்னணு-சரிபார்க்கலாம்.
மின்னணு-சரிபார்ப்புக்குப் பிறகு, படிவம் 10E சமர்ப்பிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் ஒப்புதல் எண் உருவாக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.