Do not have an account?
Already have an account?

(குறிப்பு: சரியான பதில் தடித்த எழுத்துக்களில் உள்ளது.)


Q1.நான் ஒன்றுக்கு மேற்பட்ட முறை திருத்தக் கோரிக்கையைத் தாக்கல் செய்ய முடியுமா அல்லது திருத்தப்பட்ட செலுத்துச் சீட்டை நான் திருத்த முடியுமா?


சமர்ப்பிக்கப்பட்ட எந்த செலுத்துச் சீட்டிற்கும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் ஒருமுறை மட்டுமே செலுத்துச் சீட்டு திருத்தல் கோரிக்கை அனுமதிக்கப்படும். செலுத்துச் சீட்டில் பயனர் மேற்கொண்டு திருத்தங்களைச் செய்ய விரும்பினால், அவர் அதிகாரப்பூர்வ மதிப்பிடல் அதிகாரியை அணுகலாம்.

Q2. செலுத்துச் சீட்டின் எந்த அம்சங்களைச் சரிசெய்ய முடியும்?


a) மதிப்பீட்டு ஆண்டு

b) முக்கியத் தலைப்பு -வரி பொருந்தும்

c) சிறு தலைப்பு-கொடுப்பனவு வகை

d) மேற்கூறிய அனைத்தும்

பதில் - d) மேற்கூறிய அனைத்தும்

Q3. செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியின் எத்தனை நாட்களுக்குள், நான் மதிப்பீட்டு ஆண்டை சரிசெய்யலாம்?


a) செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியிலிருந்து 7 நாட்களுக்குள்
b) செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியிலிருந்து 10 நாட்களுக்குள்
c) செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்
d) செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்

பதில் – a) செலுத்துச் சீட்டு வைப்பு தேதிக்கு 7 நாட்களுக்குப் பிறகு.

Q4. செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியின் எத்தனை நாட்களுக்குள், நான் முக்கியத்/சிறு தலைப்பை திருத்தலாம்?


a) செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்
b) செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள்
c) செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள்
d) செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியிலிருந்து 120 நாட்களுக்குள்

பதில் – a) செலுத்துச் சீட்டு வைப்புத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்.

Q5. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் எந்த செலுத்துச் சீட்டுகளைத் திருத்தலாம்?


a) மதிப்பீட்டு ஆண்டு 2020-21 முதல் அனைத்து பணம் செலுத்திய மற்றும் திறந்த/பயன்படுத்தப்படாத செலுத்துச்சீட்டுகள்

b) சிறிய தலைப்பு - 100 (முன்கூட்டிய வரி), 300 (சுய மதிப்பீட்டு வரி) மற்றும் 400 (வழக்கமான மதிப்பீட்டு வரியாக நிலுவையை செலுத்துதல்) ஆகியவற்றை உடைய செலுத்துச்சீட்டுகள்

c) மேற்கூறிய இரண்டும்

d) மேற்கூறிய எதுவும் இல்லை

பதில் – c) மேற்கூறிய இரண்டும்