Do not have an account?
Already have an account?

 

  1. மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான ITR-2 ஐ தாக்கல் செய்ய யாரெல்லாம் தகுதிபெற்றவர்கள்?

ITR-2 தனிநபர்கள் அல்லது HUF-களால் தாக்கல் செய்யப்படலாம்:

  • ITR-1 (சஹஜ்) ஐ தாக்கல் செய்ய தகுதிபெறாதவர்கள்
  • வணிகத்திலிருந்து இலாபம் அல்லது தொழிலின் ஆதாயங்களிலிருந்து வருமானம் இல்லாதவர்கள், மேலும் வணிக இலாபங்கள் அல்லது தொழிலின் ஆதாயங்களிலிருந்து கீழ்க்கண்ட வகையில் வருமானம் இல்லாதவர்கள்:
  • வட்டி
  • சம்பளம்
  • போனஸ்
  • ஒரு கூட்டு பங்குதாரர் வியாபார நிறுவனத்திடமிருந்து ஒருவர் பெற வேண்டிய அல்லது பெறப்பட்ட , தரகு அல்லது கைம்மாறு ஊதியம் என்று எந்தவொரு பெயரில் அழைக்கப்பட்டாலும்
  • எவர் ஒருவரின் வருமானத்துடன் இணைக்கப்பட வேண்டிய வாழ்க்கைத் துணையின் வருமானம், மைனர் குழந்தை போன்ற மற்றொரு நபரின் வருமானம் இருக்கிறதோ அவர்கள் – அவர்களின் இணைக்கப்பட வேண்டிய வருமானம் மேற்கூறிய எந்தவொரு வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

 

  1. மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான ITR-2 ஐ தாக்கல் செய்ய யாரெல்லாம் தகுதிபெறாதவர்கள்?

ITR-2 ஐ எந்தவொரு தனிநபராலும் அல்லது HUF ஆல் தாக்கல் செய்ய முடியாது,அதன் மொத்த வருமானத்தில் இலாபத்திலிருந்து வருமானம் மற்றும் வணிகம் அல்லது தொழிலிலிருந்து ஆதாயங்கள் அடங்கும், மேலும் வருமானமும் உள்ளது:

  • வட்டி
  • சம்பளம்
  • போனஸ்
  • ஒரு பங்குதாரர் கூட்டு நிறுவனத்திடமிருந்து பெற வேண்டிய அல்லது பெறப்பட்ட தரகு அல்லது கைம்மாறு ஊதியம் என எந்தவொரு பெயரில் இருந்தாலும்

எவர் ஒருவரின் வருமானத்துடன் இணைக்கப்பட வேண்டிய வாழ்க்கைத் துணையின் வருமானம், மைனர் குழந்தை போன்ற மற்றொரு நபரின் வருமானம் இருக்கிறதோ அவர்கள் – அவர்களின் இணைக்கப்பட வேண்டிய வருமானம் மேற்கூறிய எந்தவொரு வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

 

  1. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ITR-2 இல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

நிதிச் சட்டம் 2023, பிரிவு 115BAC இன் விதிகளைத் திருத்தியுள்ளது, இது மதிப்பீட்டாளர் ஒரு தனிநபராகவும் HUF ஆகவும் இருப்பதற்கான இயல்புநிலை வரி விதிப்பு முறையாக மாற்றியுள்ளது. மதிப்பீட்டாளர் புதிய வரி விதிப்பு முறையின்படி வரி செலுத்த விரும்பவில்லை என்றால், அவர் அதை வெளிப்படையாகத் தவிர்த்து, பழைய வரி விதிப்பு முறையின் கீழ் வரி விதிக்கப்படுவதைத் தேர்வு செய்ய வேண்டும்.

 புதிய வரி விதிப்பு முறைக்கு, பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. உங்கள் நிகர மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை இருந்தால், பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி அனுமதிக்கப்படும் மற்றும் வரி பூஜ்ஜியமாக இருக்கும். ரூ. 7 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால், பின்னர் வருமானவரி அடுக்கு விகிதத்துக்கு (ஸ்லாப் ரேட்) ஏற்ப வரியை செலுத்த வேண்டும்.

 படிவம் 10-IA விவரங்களுடன் தொடர்புடைய பிரிவின் கீழ் பெறப்பட்ட இயலாமையின் தன்மை பற்றிய விவரங்களை வழங்க அட்டவணை 80DD மற்றும் அட்டவணை 80U ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகளின் கீழ் வரி பிடித்தத்தை பெற, படிவம் 10IA ஐ தாக்கல் செய்வது கட்டாயம் என்பதை நினைவில் கொள்க. ITR ஐ தாக்கல் செய்வதற்கு முன் படிவம் 10IA ஐ தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

 அரசியல் கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை வழங்க அட்டவணை 80GGC சேர்க்கப்பட்டுள்ளது

 ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் மையப்படுத்தப்பட்ட கட்டண முறைகளைப் பயன்படுத்தி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ₹50 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கட்டண பரிவர்த்தனைகளுக்கும் LEI அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (RTGS) மற்றும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT). ₹50 கோடிக்கும் அதிகமான தொகையை திரும்பப் பெறுவதாகக் கூறப்படும் வழக்குகளில் LEI எண் வழங்கப்பட வேண்டும்.

 

  1. ITR-2 ஐ தாக்கல் செய்ய எனக்கு என்னனென்ன ஆவணங்கள் தேவை?

 

  1. நீங்கள் ஊதிய வருமானம் பெறுபவராக இருந்தால் உங்களுக்குப் பணி வழங்கியவரால் வழங்கப்படும் படிவம் 16 தேவை.
  2. நீங்கள் நிலையான வைப்புத்தொகை அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கில் வட்டி சம்பாதித்திருந்தால் மற்றும் அதன் மீது TDS கழிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு TDS சான்றிதழ்கள் அதாவது பிடித்தம் செய்பவர்களால் வழங்கப்பட்ட படிவம் 16A தேவைப்படும்.
  3. ஊதியத்திலிருந்து TDS மற்றும் ஊதியம் அல்லாதவற்றிலிருந்து TDS ஐ சரிபார்க்க உங்களுக்கு படிவம் 26AS தேவைப்படும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் இருந்து படிவம் 26AS ஐ பதிவிறக்கிக்கொள்ளலாம்.
  4. நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்களானால், வீட்டு வாடகைத் தள்ளுபடி(HRA) கணக்கிட உங்களுக்கு வாடகை கட்டண ரசீதுகள் தேவை (நீங்கள் அதை உங்கள் பணியமர்த்தியவரிடம் சமர்ப்பிக்கவில்லை என்றால் மட்டும்).
  5. உங்களிடம் மூலதனப் பங்குகளை விற்று பரிவர்த்தனைகள் மூலம் ஆதாயம் ஏதும் பெற்று இருந்தால், மூலதன ஆதாயத்தை கணக்கிடுவதற்கு ஒரு வருடத்தில் பங்குகள் அல்லது பத்திரங்களின் மூலதன ஆதாய பரிவர்த்தனைகளின் சுருக்கமான விவரம் அல்லது லாபம் / இழப்பு அறிக்கை ஆகியன இருந்தால் மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவதற்கு உங்களுக்குத் தேவைப்படும்.
  6. வட்டி வருமானத்தின் அளவைக் கணக்கிட உங்கள் வங்கி பாஸ் புக், நிலையான வைப்பு நிதி ரசீதுகள் (FDR) தேவைப்படும்.
  7. உங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு வருமானம் பெற்றிருந்தால், வீட்டுச் சொத்திலிருந்து வருமானத்தைக் கணக்கிட உங்கள் வாடகைக்தாரர் குறித்த தகவல் / உள்ளாட்சி வரி செலுத்திய விவரம் / கடன் வாங்கிய மூலதனத்திற்கான வட்டியின் விவரம் (ஏதேனும் இருப்பின்) தேவைப்படும்.
  8. நடப்பு ஆண்டில் ஏதேனும் இழப்பை நீங்கள் கோர விரும்பினால், இழப்பு குறித்த விவரம் மற்றும் அவற்றின் ஆவணங்கள் உங்களுக்குத் தேவைப்படும்.
  9. முந்தைய ஆண்டின் இழப்பை நீங்கள் கோர விரும்பினால், அந்த இழப்பை வெளிப்படுத்தி இருக்கும் முந்தைய ஆண்டுக்கான வருமான வரிப் படிவத்தின்-ITR-V நகல் உங்களுக்குத் தேவைப்படும், .
  10. உங்கள் படிவம் 16 கருத்தில் கொள்ளப்படவில்லை என்றால் 80C, 80D, 80G, 80GG போன்ற ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு ரசீதுகள், நன்கொடை ரசீதுகள், வாடகை ரசீதுகள், கல்விக் கட்டணத்திற்கான ரசீதுகள் ஆகியவற்றின் கீழ் வரிச் சேமிப்பு விலக்குகளைக் கோருவதற்கான ஆவணங்கள் அல்லது சான்றுகள் உங்களுக்குத் தேவைப்படும்.

 

  1. எனது ITR ஐ தாக்கல் செய்யும் போது சிக்கல்களைத் தவிர்க்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

உங்கள் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்வதிலும் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதிலும் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க, பின்வருவனவற்றை செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

  • ஆதாருடன் இணைக்கப்பட்ட PAN.
  • உங்கள் உபரி வரிப்பணத்தைத் திரும்பப்பெற விரும்பும் உங்கள் முன்-சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு.
  • ITR தாக்கல் செய்வதற்கு முன் சரியான ITR ஐ தேர்வு செய்யவும்; இல்லையெனில் தாக்கல் செய்த வருமானவரி அறிக்கை குறைபாடுள்ளதாகக் கருதப்படும், மேலும் நீங்கள் திருத்தப்பட்ட ITR ஐ சரியான படிவத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
  • குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமானத்தை தாக்கல் செய்யவும்.
  • உங்கள் வருமானவரி அறிக்கையை சரிபார்க்கவும் - நீங்கள் மின்னணு சரிபார்ப்பு முறையைத் தேர்வுசெய்யலாம் (பரிந்துரைக்கப்படும் விருப்பம் – இப்போதே மின்னணு சரிபார்க்கவும்) உங்கள் ITR ஐ சரிபார்க்க எளிதான வழியாகும்.

 

  1. HUF / அமைப்பு பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி பெற முடியுமா?

இல்லை. பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி ஒரு தனிநபருக்கு மட்டுமே கிடைக்கும், எனவே, ஒரு தனிநபரைத் தவிர வேறு யாரும் பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி பெற முடியாது.

 

  1. நான் குடியுரிமை பெறாதவர். நான் பிரிவு-87A-ன் கீழ் தள்ளுபடியைக் கோர முடியுமா?

இல்லை. பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி இந்தியாவில் வசிக்கும் ஒரு தனிநபருக்கு மட்டுமே கிடைக்கும், எனவே, குடியுரிமை பெறாதவர்கள் பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி பெற முடியாது.

 

  1. எனக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. ஒன்று நான் ஒவ்வொரு வாரமும் சென்று வரும் ஒரு பண்ணை இல்லம், மற்றொன்று எனது உபயோகதிற்கான வீடு. இந்த இரண்டு குடியிருப்புகளையும் சுய ஆக்கிரமிப்பு என்று கருத முடியுமா?

மதிப்பீட்டு ஆண்டு 2019-20 வரை, நீங்கள் ஒரு சொத்தை மட்டுமே சுய-ஆக்கிரமிப்பு சொத்தாகவும், மற்ற சொத்து வாடகைக்கு விடப்பட்டதாகவும் கருதப்படும்.

மதிப்பீட்டு ஆண்டு 2020-21 முதல் மட்டுமே, குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், இரண்டு வீடுகளும் குடியிருப்பு நோக்கங்களுக்காக சொந்த பயன்பாட்டுக்கான சொத்துகளாகக் கருதப்படலாம்.

 

  1. ஆண்டின் ஒரு பகுதியை சொந்தமாகவும், மற்ற பகுதியை வாடகைக்கு விடவும் பயன்படுத்தப்படும் ஒரு சொத்துக்கான வருமானத்தை எவ்வாறு கணக்கிடுவது?

இந்த வழக்கில், வீட்டுச் சொத்திலிருந்து வருமானம் என்ற தலைப்பின்கீழ் வரி விதிக்கப்படும் வருமானத்தைக் கணக்கிடும் நோக்கத்திற்காக, அத்தகைய சொத்து ஆண்டு முழுவதும் வாடகைக்கு விடப்பட்டதாகக் கருதப்பட்டு அதற்கேற்ப வருமானம் கணக்கிடப்படும்.

இருப்பினும், அத்தகைய சொத்தின் விஷயத்தில் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் கணக்கிடும்போது, உண்மையான வாடகை விடப்பட்ட காலத்திற்கு மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

 

  1. எந்த வருமானங்கள் “மூலதன ஆதாயங்கள்” என்ற தலைப்பில் வரி விதிக்கப்படுகிறது?

ஒரு வருடத்தில் மூலதன சொத்தை மாற்றுவதால் எழும் எந்தவொரு இலாபம் அல்லது ஆதாயம் மூலதன ஆதாயங்கள் என்ற தலைப்பின் கீழ் வரி விதிக்கப்படும்.

  1. மூலதன சொத்து என்றால் என்ன?

வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு2(14) இன் கீழ் வரையறுக்கப்படும் மூலதனச் சொத்து:

a) மதிப்பீட்டாளரின் வணிகத்துடனோ அல்லது தொழிலுடனோ இணைக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் மதிப்பீட்டாளரின் எந்தவொரு சொத்து.

b) SEBI சட்டம், 1992 இன் கீழ் செய்யப்பட்ட விதிமுறைகளின்படி அத்தகைய பத்திரங்களில் முதலீடு செய்துள்ள FII வைத்திருக்கும் எந்தவொரு பத்திரங்களும் (சில விலக்குகளுக்கு உட்பட்டவை).

  1. நீண்ட கால மூலதன சொத்து என்பதன் பொருள் என்ன?
    • எந்தவொரு மூலதனச் சொத்தும் அதன் பரிமாற்ற தேதியிலிருந்து 36 மாதங்களுக்கும் மேலாக இருந்தால் அது நீண்ட கால மூலதன சொத்தாகக் கருதப்படும்.
    • இருப்பினும், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகள் (ஈக்விட்டி அல்லது முன்னுரிமை) போன்ற சில சொத்துக்கள், பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளின் அலகுகள், பத்திரங்கள் மற்றும் அரசு பத்திரங்கள் போன்ற பட்டியலிடப்பட்ட பத்திரங்கள், UTI அலகுகள் மற்றும் பூஜ்ஜிய வெட்டுச்சீட்டு பத்திரங்கள், கருத்தில் கொள்ள வேண்டிய காலம் 36 மாதங்களுக்கு பதிலாக 12 மாதங்கள் ஆகும்.
    • பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகள் விஷயத்தில், இருப்புக் காலம் 36 மாதங்களுக்கு பதிலாக 24 மாதங்கள் என்று கருத்தில்கொள்ள வேண்டும்.
    • மதிப்பிட்டு ஆண்டு 2018-19 முதல், அசையாச் சொத்தை வைத்திருக்கும் காலம் (நிலம் அல்லது கட்டிடம் அல்லது இரண்டும்) 36 மாதங்களுக்குப் பதிலாக 24 மாதங்களாகக் கருதப்படும்.

 

  1. வருமான வரிச் சட்டத்தின்படி, மூலதன சொத்துக்களை மாற்றும்போது ஏற்படும் ஆதாயத்துக்கு, மூலதன ஆதாயங்கள் என்ற தலைப்பில் வரி விதிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின்படி பரிமாற்றம் என்றால் என்ன?

பொதுவாக, பரிமாற்றம் என்பது விற்பனை என்று பொருள், இருப்பினும், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 2(47) இன் படி, மூலதன சொத்து தொடர்பாக, மாற்றம் என்பதில் பின்வருவன அடங்கும்:

  • சொத்தின் விற்பனை, பரிமாற்றம் அல்லது உரிமையை கைவிடல்;
  • மூலதன சொத்துப் பரிவர்த்தனை தொடர்பாக எந்தவொரு உரிமையையும் முடிவுக்கு கொண்டு வருதல்;
  • ஒரு சொத்தை கட்டாயமாக கையகப்படுத்துதல்;
  • மூலதன சொத்தை வர்த்தகப் பங்காக மாற்றுதல்;
  • ஜீரோ கூப்பன் பத்திரத்தின் முதிர்வு அல்லது மீட்பு;
  • சொத்து மாற்றச் சட்டம், 1882 இன் பிரிவு 53A இல் குறிப்பிடப்பட்டுள்ள இயல்பிலான ஒப்பந்தத்தைப் பகுதியளவு செயல்படுத்தும் வகையில் வாங்குபவருக்கு அசையா சொத்துக்களை வைத்திருப்பதை அனுமதித்தல்;
  • அசையாச் சொத்தை மாற்றும் விளைவை ஏற்படுத்தும் (அல்லது அனுபவிக்கும் உரிமையை உருவாக்கும்) எந்தவொரு பரிவர்த்தனையும்; அல்லது
  • ஒரு சொத்தைநோ அல்லது அதில் எந்த உரிமையையோ நீக்குதல் அல்லது பிரித்தல் அல்லது எந்தவொரு சொத்திலும் எந்தவொரு வகையிலும் எந்தவொரு உரிமையையும் உருவாக்குதல்.

 

  1. மூலதன இழப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும் சரியீடு செய்வது தொடர்பாகவும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட விதிகள் யாவை?
  • ஒரு வருடத்தில் ஏற்பட்ட மூலதனச் சொத்துப் பரிவர்த்தனை மூலம் கிடைத்த ஆதாயங்கள் அதே தலைப்பின் கீழ் ஏற்பட்ட இழப்பை அதே ஆண்டில் ஈடுசெய்ய முடியவில்லை என்றால், ஈடுசெய்யப்படாத மூலதன இழப்பை அடுத்த ஆண்டில் முன்னெடுக்க முடியும்.
  • அடுத்தடுத்த ஆண்டு(களில்), இத்தகைய இழப்பை மூலதன சொத்துப் பரிவர்த்தனை மூலம் ஆதாயங்கள் என்ற தலைப்பில் வரி விதிக்கப்படக்கூடிய வருமானத்திற்கு எதிராக மட்டுமே சரிசெய்ய முடியும், இருப்பினும், நீண்ட கால மூலதன இழப்பை நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு எதிராக மட்டுமே சரிசெய்ய முடியும். குறுகிய கால மூலதன இழப்பை நீண்டகால மூலதன ஆதாயங்களுக்கும் மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கு எதிராகவும் ஈடுசெய்ய முடியும்.
  • இழப்பு ஏற்பட்ட ஆண்டைத் தொடர்ந்து அடுத்தடுத்து எட்டு ஆண்டுகளுக்கு இத்தகைய இழப்பை முன்னெடுக்க முடியும்.
  • பிரிவு 139(1) இன் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, இழப்பு ஏற்பட்ட ஆண்டின் வருமானம்/இழப்பு குறித்த வருமானவரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே இத்தகைய இழப்பை முன்கூட்டியே செலுத்த முடியும்.

 

 

  1. 2(47A) பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்ட மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது?

மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் ஆதாயங்கள் பிரிவு 115BBH இன் கீழ் 30% வரிக்கு (பொருந்தக்கூடிய உபரி வரி மற்றும் 4% வரியின் மீதான வரி) உட்பட்டது.

 

  1. ITR படிவத்தில் VDA வருமானத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது?

ITR-2 மற்றும் 3 இல் "அட்டவணை VDA" என்ற தனி அட்டவணை உள்ளது, அங்கு உங்கள் VDA வருமானத்தை பரிவர்த்தனை வாரியாக வெளியிடலாம். மேலும் இது மூலதன ஆதாய வருமானம் என்ற தலைப்பின் கீழ் 30 % சிறப்பு விகிதத்தில் வரி விதிக்கப்படும்.

 

2