இணை உலாவி தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. இணை உலாவி என்றால் என்ன, இது வரி செலுத்துபவர் சேவைக்கு எவ்வாறு உதவுகிறது?
கூட்டு உலாவல் என்றும் அழைக்கப்படும் இணை உலாவி, உதவி மைய முகவர்களுக்கு வரி செலுத்துபவர்களின் உலாவியுடன் நிகழ்நேரத்தில், ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் ஒத்துழைக்க அனுமதிக்கிறது. முகவர்கள், வரி செலுத்துபவர்களின் உலாவித் திரையை பாதுகாப்பாக காட்டவும், அவர்களுடன் இணைந்து வழிகாட்டவும், நிகழ்நேர மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவை வழங்குவதற்காக ஊடாடி வழிநடத்தவும் முடியும்.
2. இணை உலாவியின் மூலம் நான் என்ன செய்யலாம்?
இணை உலாவியின் அமர்வின் போது:
- வரி செலுத்துபவர்களின் உலாவித் திரையின் துல்லியமான காட்சி பிரதிநிதித்துவத்தை உதவி மைய முகவர் பெறக்கூடியவராக இருக்கிறார்.
- வரி செலுத்துபவர்களின் திரையில் காட்டப்படும் பகுதிகளில் முகவர்கள் குறிப்புகளைச் செய்யலாம், ITR படிவங்கள், பிற சட்டப்படியான படிவங்களை நிரப்பவும், அமைப்புகளை மாற்றவும், பரிவர்த்தனைகளை முடிக்கவும், வரி செலுத்துபவர்களுக்கான உதவி மற்றும் குறிப்புப் பொருட்களைக் கண்டறியவும், மேலும் ஆவணங்களை பதிவேற்றவும் உதவலாம்
- வரி செலுத்துபவருக்கு அதே உலாவி தாவலில் நிகழ்நேரத்தில் வழிகாட்டவும், உருட்டவும், உரையைத் தட்டச்சு செய்யவும், மேலும் ஆர்வமுள்ள பகுதிகளை சுட்டிக்காட்டுவது போன்றும் முகவர்கள் உதவலாம்.
- இணை உலாவியை பயன்படுத்துவது எளிதானதாகும். வாடிக்கையாளர் சிக்கலை விரைவாக தீர்க்க நேரலை அரட்டை, தொலைபேசி ஆகியவற்றுடன் எளிதாக இணைக்க முடியும்.
3. இணை உலாவி முகவருக்கு மற்ற தரவுகளை காட்ட அனுமதிக்கிறதா?
இல்லை. வரி செலுத்துபவர்களின் மேசைத்தளம் அல்லது கணினியில் உள்ள வேறு எந்தத் தரவையும் முகவர் பார்க்க இணை உலாவி அனுமதிப்பதில்லை. மேலும், முகவர்கள் இணை உலாவி அமர்வைத் தொடங்குவதற்கு முன் வரி செலுத்துபவர் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும். வரி செலுத்துபவர் கலந்துரையாடலை நிறுத்த விரும்பினால், எந்த நேரத்திலும் இணை உலாவி மூலம் அமர்வை முடிக்கலாம்.
4. உதவி மைய முகவர் பக்கத்தில் இருந்து இணை உலாவி அமர்வை எவ்வாறு தொடங்குவது?
- முகவருக்கு அழைப்பு வருவதோடு, அவரின் முன்பாக CRM பாப் அப் தோன்றும்.
- முகவர், வரி செலுத்துபவரிடம் பேசி, வருமானவரி இணைய முகப்பில் இணை உலாவி பட்டனை எங்கு கண்டறியலாம் என்று அவருக்கு வழிகாட்டுவார்.
- வரி செலுத்துபவர் PIN ஐ உருவாக்கி, அதை முகவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- முகவர் CRM இல் உள்ள CB பட்டனை கிளிக் செய்ய வேண்டும், இது அவரை இணை உலாவி URLக்கு அழைத்துச் செல்லும்.
- வரி செலுத்துபவர் பகிர்ந்த PIN ஐ முகவருக்குக் காண்பிக்கப்படும் திரையில் உள்ளிட்டு, பின்னர் ஸ்டார்ட் செஷன் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- முகவர், ஸ்டார்ட் செஷன் பட்டனை கிளிக் செய்தவுடன் இணை உலாவி அமர்வு தொடங்கும் மற்றும் முகவர் வரி செலுத்துபவருக்கு வழிகாட்டலாம்.
- வரி செலுத்துபவர் பதில்களைப் பெற்ற பிறகு, எந்த நேரத்திலும் 'நிறுத்து' பட்டனை கிளிக் செய்யலாம். அமர்வு முடிந்ததும், முகவரால் வரி செலுத்துபவர்களின் உலாவியை பார்க்க முடியாது
5. இணை உலாவி எவ்வாறு செயல்படுகிறது
வரி செலுத்துபவர் அமர்வைத் தொடங்கும்போது, உலாவி, இணை உலாவி பதிலிக்கு (கோ-பிரவுசர் ப்ராக்ஸி) ஒரு கோரிக்கையை அனுப்புகிறது.
- அசல் கோரிக்கை, corbrowse.incometax.gov.in இலிருந்து வந்ததாகத் தோன்றும் வகையில் கோரிக்கை மாற்றப்பட்டுள்ளது.
- இந்த கோரிக்கை, பின்னர் இணை உலாவியை பயன்படுத்த லீடர் விரும்பும் அசல் இணையதளத்திற்கு அனுப்பப்படுகிறது.
- இணை உலாவி பதிலிக்கான பதிலை இணையதளம் திருப்பி அனுப்புகிறது.
- இணை உலாவி பதிலி பின்னர் தரவை மாற்றியமைக்கிறது, இதனால் அது அசல் பக்கத்தின் மேல் இருக்கும் ஐஃப்ரேமில் ஏற்றப்பட முடியும்.
- ஐஃப்ரேமில் இணையதளம் ஏற்றப்படுவதால், லீடரும் பின்தொடர்பவரும் இணையதளத்துடன் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள். இந்தக் கட்டத்தில் இருந்து, பயனரின் உலாவிகளுக்கும் பதிலிக்கும் இடையே மட்டும் தொடர்பு இருக்கும், மேலும் கோரிக்கைகள் அசல் இணையதளத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட வேண்டியதில்லை.
6. இணை உலாவியை பயன்படுத்துவதன் நன்மைகள்
- இணை உலாவி தீர்வுக்கு எந்த நிறுவல்களோ சொருகிகளோ (பிளக்இன்ஸ்) தேவையில்லை
- தடையற்ற வழிகாட்டல், சராசரி கையாளுதல் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுதல் மற்றும் தீர்மான விகிதங்களை அதிகரித்தல்
- முக்கியமான புள்ளிகளை சுட்டிக்காட்டி, மேலும் குறிப்பு எழுதுதல்
- எளிதான ஒருங்கிணைப்புடன் எளிதான பயன்பாடு, அதனால் வாடிக்கையாளர் திருப்தி அதிகரிக்கும்
7. இணை உலாவியும் திரைப் பகிர்வும் இடையேயான வித்தியாசம் என்ன?
| இணை உலாவி | திரைப் பகிர்வு |
|---|---|
| எந்தவொரு மென்பொருளையும் பதிவிறக்கம் செய்ய யாரும் தேவையில்லை என்பதால், இணை உலாவி என்பது காட்சி ஈடுபாட்டின் மிகவும் வசதியான வடிவமாகும். முகவர்கள் ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வரி செலுத்துபவர்களின் உலாவிகளுடன் விரைவாக இணையலாம். | முகவரும் வரி செலுத்துபவரும் தங்கள் திரைகளைப் பகிர்வதற்கு முன்பு, ஜும் அல்லது கூகுள் மீட் போன்ற மூன்றாம் தரப்பு செயலியை நிறுவ வேண்டும். |
| இணை உலாவியில், வெறும் வரி செலுத்துபவர்களின் உலாவியின் செயலில் உள்ள சாளரத்தை முகவரால் பார்க்க மட்டும் முடியும், மற்றவை எதையும் பார்க்க முடியாது. இதனால், வரி செலுத்துபவருக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குகிறது. | வாடிக்கையாளர்களின் முழு மேசைத்தளத்தையும் அல்லது பாப் அப் செய்யக்கூடிய எந்த அறிவிப்புகளையும் சேவை பிரதிநிதிகளால் பார்க்க முடியும். |
| முகவர் வாடிக்கையாளரின் உலாவியில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய முடியும் (சுட்டிக்காட்டுதல், குறிப்பு எழுதுதல், கிளிக் செய்தல், படிவங்களை நிரப்புதல் போன்றவை), மேலும் வரி செலுத்துபவர்களின் கேள்விகளை விரைவாக தீர்த்து அவர்களுக்கு உதவ முடியும். | வரி செலுத்துபவர்களின் திரையில் முகவர்கள் எந்த செயல்களையும் செய்ய முடியாது, மேலும் திரைப் பகிர்வு அமர்வின் போது அவர்கள் வாய்வழி வழிமுறைகளை மட்டுமே வழங்க முடியும். |
| பெரும்பாலான இணை உலாவி மென்பொருள்கள், இணை உலாவி அமர்வின் போது வரி செலுத்துபவர்களின் இரகசியத் தரவுகளை (கடவுச்சொற்கள் போன்றவை) மறைக்கும் 'தரவு மறைப்பு' எனப்படும் அம்சத்துடன் வருகின்றன. | திரைப் பகிர்வு தரவு மறைப்பை வழங்காது, இதனால் முகவர்கள் வரி செலுத்துபவர்களின் திரையில் காண்பிக்கப்படும் அனைத்தையும் பார்க்க முடியும். |