Do not have an account?
Already have an account?

TAN லாகினின் மூலம் சாலான் உருவாக்கம்

1. மேலோட்டப்பார்வை

வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழ் வரிச் செலுத்தல்களுக்கான செலுத்துச் சீட்டு (challan) படிவங்கள் ITNS 281N மற்றும் ITNS 282N ஆகியவற்றை மின்னணு-தாக்கல் இணைய முகப்பு வாயிலாக உருவாக்குவது குறித்த படிப்படியான வழிகாட்டுதலை இந்த ஆவணம் வரி செலுத்துவோருக்கு வழங்குகிறது. வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ், இதற்குப் பொருந்தக்கூடிய செலுத்துச் சீட்டு (challan) படிவங்கள் ITNS 281, ITNS 282 ஆகும்.

ஒரு முக்கியமான நடைமுறை மாற்றம் என்னவென்றால், வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் செலுத்துச் சீட்டுகள் (challans) மதிப்பீட்டு ஆண்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டன; ஆனால் வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழ், செலுத்துச் சீட்டுகள் (chsallan) வரி ஆண்டின் அடிப்படையில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்தக் கையேடு, வரி செலுத்துவோர் சரியான சட்டம், வரி வகை மற்றும் வரிக் காலம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதன் வாயிலாக, இரு சட்டங்களின் கீழும் செலுத்துச் சீட்டுகளைச் (challans) சரியாக உருவாக்குவதற்கு வழிகாட்டுகிறது. பயனர்கள் தங்களது TAN உள்நுழைவின் வாயிலாக பின்வரும் செலுத்தல்களைச் செய்யலாம்:

ITNS 281N/ITNS 281 பின்வரும் செலுத்தல்களை உள்ளடக்குகிறது:-

  • வருமான வரிச் சட்டத்தின் கீழ் மூலத்தில்பிடித்தம் செய்யப்பட்ட வரி (TDS) / மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரி (TCS)
  • TDS/TCS தொடர்பான வரி நிலுவைத் தொகை
  • மேல்முறையீட்டுக் கட்டணங்கள் மற்றும் கூட்டுத்தொகைக் கட்டணங்கள்

ITNS 282N/ITNS 282 பின்வரும் செலுத்தல்களை உள்ளடக்குகிறது:-

  • e-DRS திட்டம் தொடர்பான விண்ணப்பக் கட்டணங்கள்

2. இச்சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

வரிச் செலுத்துவதற்கான செலுத்துச் சீட்டை (challan) நீங்கள் உள்நுழைவதற்கு முன்போ (மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவதற்கு முன்) அல்லது உள்நுழைந்த பின்போ (மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பின்) உருவாக்கலாம்.

விருப்பத் தேர்வு

முன்தேவைகள்

முந்தைய உள்நுழைவு

  • வரி செலுத்த வேண்டிய செல்லுபடியாகும் TAN எண்
  • பற்று அட்டை / கடன் அட்டை / இணைய வங்கி வசதி / UPI போன்றவை; மற்றும்
  • ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லைப் பெறுவதற்கான செல்லுபடியாகும் அலைப்பேசி எண்.

பிந்தைய உள்நுழைவு

  • மின்னணு-தாக்கல் இணையமுகப்பில்www.incometax.gov.in பதிவுசெய்யப்பட்ட பயனர்;
  • பற்று அட்டை / கடன் அட்டை /இணைய வங்கி வசதி
    /UPI போன்றவை.

முக்கியக் குறிப்பு:

தற்போதைய நிலவரப்படி, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்ள மின்னணு-வரி செலுத்தல் சேவையின் வாயிலாக கட்டணம் செலுத்தும் நுழைவாயில் முறையில் வரி செலுத்தும் வசதியானது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக மட்டுமே கிடைக்கிறது.

3. படிப்படியான வழிக்காட்டி

3.1 செலுத்துச் சீட்டு படிவத்தை (CRN) உருவாக்கவும் (பிந்தைய உள்நுழைவு)

3.1.1பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.

Data responsive

3.1.2முகப்புப் பலகையில், மின்னணு-தாக்கல் மற்றும் மின்னணு-வரி செலுத்தல் என்பதைக் கிளிக் செய்யவும். மின்னணு-வரி செலுத்தல் என்பதைக் கிளிக் செய்ததும், பயனர் சட்டத் தேர்வு திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார். பொருத்தமான தேர்வைச் செய்த பிறகு, தொடரவும் பட்டனைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு பயனர்மின்னணு-வரி செலுத்தல்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.

Data responsive

3.1.3மின்னணு வரி செலுத்தும் பக்கத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக மட்டுமே புதிய செலுத்துச் சீட்டு படிவத்தை (CRN) உருவாக்க புதிய பண செலுத்தல் என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும். இந்த வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் வாயிலாக வரி செலுத்துவதற்கு,RBI வழங்கியுள்ள NEFT/RTGS வசதியைப் பயன்படுத்தலாம்.

Data responsive

3.1.4 புதிய பண செலுத்தல் பக்கத்தில், உங்களுக்குப் பொருந்தக்கூடிய வரி செலுத்தும் கட்டத்தின் கீழ் உள்ள தொடரவும் என்பதை கிளிக் செய்யவும். முந்தைய திரையில் நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டத்தின் அடிப்படையில் இந்த தலைப்புகள் செயல்பாட்டிற்கு வரும்.

  • AY 2026-27 வரையிலான (மார்ச் 2026 தொடர்பான பணச் செலுத்தல்கள் உட்பட) TDS/TCS சார்ந்த வரிச் செலுத்தல்களைச் செய்ய, “வருமானவரி சட்டம் 1961” என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
  • TY 2026–27 முதற்கொண்டு, அதற்கடுத்த காலங்களுக்கான வரிச் செலுத்தல்களைச் செய்வதற்கு “வருமான வரிச் சட்டம் 2025”, என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.1.5  வருமானவரி சட்டம் 1961 ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்ததும், பின்வரும் தலைப்புகள் திரையில் தோன்றும்:

தகவல் தலைப்புங்களின் மேலோட்டப்பார்வை

தலைப்பின் பெயர்

முதன்மைத் தலைப்பு

சிறு தலைப்பு

வழிமுறைகளும் சம்பந்தப்பட்ட செலுத்துச் சீட்டுகளும்

TDS/TCS-ஐச் செலுத்தவும்

Corporation Tax (0020)/ Income Tax (Other than Companies) (0021)

வரி செலுத்துபவர் செலுத்த வேண்டிய TDS/TCS (200)

AY 2026-27 அல்லது அதற்கு முந்தைய AYs-க்கான TDS/TCS வரிச் செலுத்தல்களைச் செய்ய தயவுசெய்து இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு செலுத்துச் சீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிடித்தம் செய்யப்படுபவர் வகைக்கு ஒரே ஒரு பிரிவு குறியீட்டை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.

உள்ளடக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகள்: ITNS281

செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை

Corporation Tax (0020)/ Income Tax (Other than Companies) (0021)

TDS/TCS வழக்கமான மதிப்பீடு (400)

AY 2026-27 அல்லது அதற்கு முந்தைய மதிப்பீட்டு AYs-க்கான நிலுவையில் உள்ள வரி கோரிக்கைச் செலுத்தல்களைச் செய்ய தயவுசெய்து இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு செலுத்துச் சீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிடித்தம் செய்யப்படுபவர் வகைக்கு ஒரே ஒரு பிரிவு குறியீட்டை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.

உள்ளடக்கிய செலுத்துச் சீட்டுகள்: ITNS 281

கட்டணம் செலுத்துக [மற்ற ரசீது (500)]

நிறுவன வரி (0020) / வருமான வரி (நிறுவனங்கள் தவிர மற்றவை) (0021)

மற்ற வரவுகள் (500)

AY 2026-27 அல்லது அதற்கு முந்தைய மதிப்பீட்டு AYs-க்கான மேல்முறையீட்டுக் கட்டணங்கள் மற்றும் சமரசக் பணச் செலுத்தலை செலுத்தத் தயவுசெய்து இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உள்ளடக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகள்:ITNS 281

பலவகை வரவுகள்

நிறுவன வரி (0020) / வருமான வரி (நிறுவனங்கள் தவிர மற்றவை) (0021)

பிற வகை வரவுகள் (800)

AY 2026-27 அல்லது அதற்கு முந்தைய AYs-க்கான பிரிவு 245MA-இன் கீழ் (படிவம் எண் 34BC) விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த, தயவுசெய்து இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உள்ளடக்கப்பட்ட செலுத்து சீட்டுகள்: ITNS282

Data responsive

3.1.6 பொருந்தக்கூடிய வரிச் செலுத்துதல் கட்டத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, கீழே உள்ள அட்டவணையில் உள்ளவாறு விளக்கங்களை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

வரிசை.எண்

வரி செலுத்தும் வகை

உள்ளிட வேண்டிய விளக்கங்கள்

பிரிவு குறித்த விளக்கங்கள்

1

TDS/TCS செலுத்துவதற்கான தலைப்பு

  • கிடைக்கக்கூடிய விருப்பங்களின் பட்டியலிலிருந்து செலுத்துகை வகையைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் குறியீடு /பிரிவு வாயிலாக வடிகட்டவும்.
  • கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து பொருந்தக்கூடிய வரி (முக்கியத் தலைப்பு)-ஐத் தேர்ந்தெடுக்கவும்.

இதற்கான விளக்கங்களை உள்ளிடவும்:

 • வரி 

• உபரி வரி

• வரியின் மீதான வரி

• வட்டி

• அபராதம்

• பிரிவு 234E-இன் கீழ் கட்டணம்

2

நிலுவையில் உள்ள கோரிக்கைக்கான வரிச் செலுத்துதல் தலைப்பு

  • கிடைக்கக்கூடிய விருப்பங்களின் பட்டியலிலிருந்து செலுத்துகை வகையைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் குறியீடு /பிரிவின் வாயிலாக வடிகட்டவும்.
  • கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து பொருந்தக்கூடிய வரியைத் (முதன்மைத் தலைப்பு) தேர்ந்தெடுக்கவும்

இதற்கான விளக்கங்களை உள்ளிடவும்:

• வரி

• உபரி வரி

• வரியின் மீதான வரி

• வட்டி

• அபராதம்

3

கட்டணம் செலுத்துக [மற்ற வரவுகள் (500)] தலைப்பு

  • கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து கட்டணத்தின் துணை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

இதற்கான விளக்கங்களை உள்ளிடவும்:

• வரி

• உபரி வரி

• வரியின் மீதான வரி

• வட்டி

• அபராதம்

• பிரிவு 234E-இன் கீழ் கட்டணம்

(சரியான விருப்பங்களைக் குறிப்பிடவும்)

4

பலவகை வரவுகள் தலைப்பு

  • கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து பொருந்தக்கூடிய வரியைத் (முக்கியத் தலைப்பு) தேர்ந்தெடுக்கவும்.
  • கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து கட்டண வகையைத் (சிறு தலைப்பு) தேர்ந்தெடுக்கவும்.
  • கட்டணத்தின் துணை வகையைத் தேர்ந்தெடுக்கவும்

மற்ற நெடுவரிசையில் தொகை "1000" எனத் தானாகவே நிரப்பப்படும்.

 

3.1.7  வரி விவரக் கூறுகள் விளக்க பக்கத்தில், மேலே குறிப்பிட்டவாறு மொத்த வரிப் பணத்திற்கான தனித்தனி விளக்கங்களைச் சேர்த்துவிட்டு, தொடரவும் என்பதை அழுத்தவும்.

3.1.8 தொடரவும் பட்டனைக் கிளிக் செய்ததும், கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும் ("வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி எப்படிப் பணம் செலுத்துவது" என்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பயனர் கையேட்டைப் பார்க்கவும்).

Data responsive

வெற்றிகரமாகப் பணம் செலுத்தியப் பிறகு, அதற்கான உறுதிப்படுத்தல் செய்தி திரையில் தோன்றும். பதிவிறக்கு பட்டனைக் கிளிக் செய்து, செலுத்துச் சீட்டு ரசீதை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மின்னணு-வரி செலுத்தல் பக்கத்தில் உள்ள பணம் செலுத்தல் வரலாறு பகுதிக்குச் சென்று, நீங்கள் செலுத்திய கட்டண விவரங்களைப் பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் புதிய கட்டணம் ஏதேனும் செலுத்த விரும்பினால், மற்றுமொரு கட்டணம் செலுத்துக பட்டனைக் கிளிக் செய்யவும்.

3.1.9 வருமான வரிச் சட்டம் 2025 (ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கும்போது, பின்வரும் தலைப்புகள் கிடைக்கப்பெறும்:

தலைப்புகளின் மேலோட்டப்பார்வை:

தலைப்புகளின் பெயர்

முக்கியத் தலைப்பு

சிறு தலைப்பு

அறிவுறுத்தல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட செலுத்துச் சீட்டுகள்

TDS/TCS-ஐ செலுத்தவும்

கூட்டுத்தாபன வரி (0020) / வருமான வரி (நிறுவனங்கள் தவிர மற்றவை) (0021)

வரி செலுத்துபவரால் செலுத்த வேண்டிய TDS/TCS (200)

TY 2026-27 மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளுக்கான TDS/TCS கட்டணங்களைச் செலுத்த, தயவுசெய்து இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

TDS/TCS பிரிவு வாரியான கட்டண விவரங்கள்’ பிரிவின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பிடித்தம் செய்யப்படுபவர் வகைக்கு ஒரே செலுத்துச் சீட்டில் அதிகபட்சமாக 20 பிரிவுக் குறியீடுகள் வரை தேர்ந்தெடுக்கலாம். 20-க்கும் மேற்பட்ட குறியீடுகள் தேவைப்பட்டால், கூடுதல் செலுத்துச் சீட்டு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

உள்ளடக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகள்: ITNS281N

வரி நிலுவைத் தொகையைச் செலுத்துக

நிறுவன வரி (0020) / வருமானவரி (நிறுவனங்கள் அல்லாதவை) (0021)

TDS/TCS-இன் வழக்கமான மதிப்பீடு (400)

TY 2026-27 மற்றும் அதற்குப் பிந்தைய காலத்திற்கான வரி நிலுவையில் உள்ள கோரிக்கை தொகையைச் செலுத்த, தயவுசெய்து இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உள்ளடக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகள்: ITNS 281N

கட்டணம் செலுத்தவும் [மற்ற ரசீது (500)]

நிறுவன வரி (0020) / வருமானவரி (நிறுவனங்கள் அல்லாதவை) (0021)

மற்ற வரவுகள் (500)

TY 2026-27 மற்றும் அதற்குப் பிந்தைய காலத்திற்கான மேல்முறையீட்டுக் கட்டணங்கள் மற்றும் கூட்டுச் சமரசக் கட்டணங்களைச் செலுத்த, தயவுசெய்து இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உள்ளடக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகள்: ITNS 281N

பலவகை வரவுகள்

நிறுவன வரி (0020) / வருமானவரி (நிறுவனங்கள் அல்லாதவை) (0021)

இதர பலவகை வரவுகள் (800)

TY 2026-27 > அதற்குப் பிந்தைய காலத்திற்கான, பிரிவு 379-ன் கீழ் e-DRS விண்ணப்பக் கட்டணத்தை (படிவம் எண் 119) செலுத்த, தயவுசெய்து இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உள்ளடக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகள்: ITNS 282N

Data responsive

3.1.10 TDS/TCS செலுத்துதல் தலைப்பு

‘TDS/TCS செலுத்தவும்’ தலைப்பில் உள்ள தொடரவும் பொத்தானை கிளிக் செய்தவுடன், பயனர் ‘பிடித்தம் செய்யப்படுபவர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்’ திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு, பொருந்தக்கூடிய முக்கியத் தலைப்பு மற்றும் பிடித்தம் செய்யப்படுபவரின் குடியிருப்பு நிலை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Data responsiveData responsive

குறிப்பு:

தேர்ந்தெடுக்கும் பிடித்தம் செய்யப்படுபவர் வகை திரையில் பயனர் தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்யும்போது, அவர்கள் பணம் செலுத்தல் முறை பற்றிய விவரங்களைச் சேர்க்க திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு அவர்கள் குறைந்தது ஒரு பிரிவிலாவது (கீழே உள்ள திரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு) புள்ளிவிவரங்களை உள்ளிட வேண்டும்.

  • TDS/TCS பிரிவு வாரியான பண செலுத்தலின் விவரங்கள், இது பிரிவு வாரியாக வரி, உபரி வரி மற்றும் கல்விக்கான செஸ் வரி ஆகியவற்றை உள்ளிட அனுமதிக்கிறது (ஒவ்வொரு பிரிவு குறியீட்டையும் ஒரு முறை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்).

- தயவுசெய்து கவனிக்கவும், "பிடித்தம் செய்யப்படுபவரின் வகை" மற்றும் "பிடித்தம் செய்யப்படுபவரின் குடியிருப்பு நிலை" ஆகியவற்றின் அடிப்படையில் தனி செலுத்துச் சீட்டு நிரப்பப்பட வேண்டும்.

- ஒரு செலுத்துச் சீட்டில் பயனர் 20 பிரிவு குறியீடுகளைத் தேர்ந்தெடுக்கலாம்

- இந்தப் பிரிவின் கீழ், பயனர் வரி விவரங்களுடன் சேர்த்து விளக்கங்களையும் உள்ளிட வேண்டும்; அதாவது வரி, உபரி வரி > கல்விக்கான செஸ் வரி ஆகிய தொகைகளை உள்ளிட வேண்டும்.

  • மற்ற கட்டண விவரங்கள், இங்கு பயனர் வட்டி, பிரிவு 427-இன் கீழ் கட்டணம், அபராதம் மற்றும் மற்ற தொகைகளை உள்ளிடலாம்.
Data responsive

3.1.11 கட்டண விவரங்களின் தன்மையைச் சேர்த்தல்’ திரையில் உள்ள தொடரவும் பட்டனை கிளிக் செய்யும்போது, பயனர் ‘வரி விவரக் கூறுகள் விளக்கங்களைச் சரிபார்த்தல்’ திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்; அங்கு அனைத்து விவரங்களும் தானாகவே நிரப்பப்பட்டிருக்கும் மற்றும் அவற்றை மாற்றியமைக்க முடியாது.

Data responsive

3.1.12 ‘வரி விவரக் கூறுகள் விளக்கங்களைச் சரிபார்க்கவும்’ திரையில் உள்ள தொடரவும் பொத்தானை கிளிக் செய்தவுடன், பயனர் கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு, வரியைச் செலுத்துவதற்கான பொருத்தமான கட்டண செலுத்தும் முறையை பயனர் தேர்ந்தெடுக்கலாம்.

Data responsive

3.1.13“தொடரவும்” பொத்தானை கிளிக் செய்தவுடன், பயனர் முன்னோட்டம் மற்றும் பணம் செலுத்துதல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். இங்கு, பயனர் பின்வருவனவற்றைச் செய்யலாம்:

  • பணம் செலுத்தல் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், உள்ளிடப்பட்ட அனைத்து நடவடிக்கைகளைச் சரிபார்க்கவும்.
  • திருத்தங்கள் ஏதேனும் தேவைப்பட்டால், பயனர் “திருத்து” பொத்தானை கிளிக் செய்து, முந்தைய பகுதிக்குச் சென்று புள்ளிவிவரங்களை மேம்படுத்தவும்.
  • அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், பயனர் “இப்போது செலுத்தவும்” பொத்தானைக் கிளிக் செய்யலாம். அதன் பின்னர், பரிவர்த்தனையை நிறைவு செய்வதற்காகப் பயனர் வங்கியின் பணம் செலுத்தல் பக்கத்திற்குஅழைத்துச் செல்லப்படுவார்.

குறிப்பு: வெற்றிகரமாகப் பணம் செலுத்திய பிறகு, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID மற்றும் அலைப்பேசி எண்ணுக்கு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் மற்றும் SMS உங்களுக்கு அனுப்பப்படும். பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்தவுடன், எதிர்காலப் பயன்பாட்டிற்காக செலுத்துச் சீட்டு ரசீதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் மற்றும் செலுத்துச் சீட்டு ரசீதின் விவரங்கள் பிந்தைய உள்நுழைவு மின்னணு-வரி செலுத்தல் பக்கத்தில் உள்ள பண செலுத்தல் வரலாறு தாவலிலும் கிடைக்கின்றன.

3.1.14 வரி நிலுவைத் தொகையைச் செலுத்தவும் தலைப்பு

வரி நிலுவைத் தொகையைச் செலுத்தவும் தலைப்பில் உள்ள தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்தவுடன், பயனர் ‘பொருந்தக்கூடிய வரி விவரங்களைச் சேர்க்கவும்’ திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு, முக்கியத் தலைப்பு, வரி ஆண்டு மற்றும் சிறு தலைப்பு ஆகியவை முன்பே நிரப்பப்பட்டிருக்கும்.

Data responsiveData responsive

‘பொருந்தக்கூடிய வரி விவரங்களைச் சேர்க்கவும்’ திரையில் உள்ள தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்தவுடன், பயனர் ‘வரி விவரக் கூறுகள் விளக்கங்களைச் சேர்க்கவும்’ திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு, மொத்த வரி செலுத்தும் தொகையின் பிரிப்பு விவரங்களைப் பயனர் உள்ளிட்டு, தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்யலாம்.

Data responsive

‘வரி விவரக் கூறுகளைச் சேர்க்கவும்’ திரையில் உள்ள தொடரவும் பொத்தானை கிளிக் செய்தவுடன், பயனர் கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு, வரியைச் செலுத்துவதற்கான பொருத்தமான கட்டணம் செலுத்தும் முறையை பயனர் தேர்ந்தெடுக்கலாம். கட்டணத்தை நிறைவு செய்வதற்கான செயல்முறைக்கு, படி எண் 3.1.12 மற்றும் 3.1.13-ஐப் பார்க்கவும்.

3.1.15 கட்டணம் செலுத்தவும் (பிற ரசீதுகள் (500)]தலைப்பு

செலுத்துதல் கட்டணம் [மற்ற வரவுகள் (500)] தலைப்பில் உள்ள தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்தவுடன், பயனர் பொருந்தக்கூடிய 'வரி விவரங்களைச் சேர்க்கவும்' திரைக்கு மாற்றப்படுவார். அங்கு முக்கியத் தலைப்பு மற்றும் வரி ஆண்டு ஆகியவை முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும். பயனர் ‘கட்டணத்தின் துணை வகை’யைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

Data responsiveData responsive

‘வரி தொடர்பான விவரங்களைச் சேர்க்கவும்' திரையில் உள்ள தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்தவுடன், பயனர் ‘வரி விவரக் கூறுகள் விளக்கங்களைச் சேர்க்கவும்’ திரைக்கு மாற்றப்படுவார். இந்தத் திரையில் உள்ள அனைத்து புலங்களும் திருத்த முடியாதவையாக (சாம்பல் நிறத்தில்) இருக்கும். ‘மற்றவை’ என்ற நெடுவரிசையில் மட்டும் தொகையை உள்ளிட்டு, தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

Data responsive

‘வரி விவரக் கூறுகள் விளக்கங்களைச் சேர்க்கவும்’ திரையில் உள்ள தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்தவுடன், பயனர் ‘கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும்’ என்ற பக்கத்திற்கு மாற்றப்படுவார். அங்கு, வரித் தொகையைச் செலுத்துவதற்கான பொருத்தமான கட்டணம் செலுத்தும் முறையைப் பயனர் தேர்ந்தெடுக்கலாம். கட்டணத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு, படிநிலை எண் 3.1.12 மற்றும் 3.1.13-ஐப் பார்க்கவும்.

3.1.16 இதர வரவுகள் தலைப்பு

இதர வரவுகள் தலைப்பில் உள்ள தொடர்க பொத்தானைக் கிளிக் செய்தவுடன், பயனர் ‘வரி தொடர்பான விவரங்களைச் சேர்க்கவும்’ திரைக்கு மாற்றப்படுவார். அங்கு பயனர் முக்கியத் தலைப்பு, சிறு தலைப்பு மற்றும் கட்டணத்தின் துணை வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

Data responsive

‘வரி தொடர்பான விவரங்களைச் சேர்க்கவும்’ திரையில் உள்ள தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்தவுடன், பயனர் ‘வரி விவரக் கூறுகள் விளக்கங்களைச் சேர்க்கவும்’ திரைக்கு மாற்றப்படுவார். இந்தத் திரையில் ‘மற்றவை’ என்ற நெடுவரிசையில் "INR 1000" என்ற தொகை முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும்.

Data responsive

‘வரி விவரக் கூறுகள் விளக்கங்களைச் சரிபார்க்கவும்’ திரையில் உள்ள தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்தவுடன், பயனர் கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும் என்ற பக்கத்திற்கு மாற்றப்படுவார். அங்கு, வரித் தொகையைச் செலுத்துவதற்கான பொருத்தமான கட்டண முறையை பயனர் தேர்ந்தெடுக்கலாம். கட்டணத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு, படிநிலை எண் 3.1.12 மற்றும் 3.1.13-ஐப் பார்க்கவும்.

3.2 செலுத்துச் சீட்டு (challan) படிவத்தை உருவாக்குதல் (CRN) (உள்நுழைவதற்கு முன்)

3.2.1 மின்னணு-தாக்கல் இணைய முகப்பு www.incometax.gov.in-க்கு சென்று, மின்னணு வரி செலுத்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

3.2.2  மின்னணு-வரி செலுத்தல் பக்கத்தில், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான விவரங்களை நிரப்பி, தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

Data responsive

3.2.3  OTP சரிபார்ப்பு பக்கத்தில், படிநிலை 2-இல் உள்ளிடப்பட்ட அலைப்பேசி எண்ணிற்கு பெறப்பட்ட 6 இலக்க OTP-ஐ உள்ளிட்டு, தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

Data responsive

3.2.4  OTP சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் TAN மற்றும் மறைக்கப்பட்ட பெயருடன் கூடிய வெற்றிச் செய்தி காட்டப்படும். தொடர்வதற்கு தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

Data responsive

3.2.5  மின்னணு-வரி செலுத்தல் பக்கத்தில், உங்களுக்குப் பொருந்தும் வரி செலுத்தும் வகையின் மீது தொடரவும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

  • “வருமானவரி சட்டம் 1961” என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் மதிப்பீட்டு ஆண்டு (A.Y) 2026–27 மற்றும் அதற்கு முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான TDS/TCS தொடர்பான கட்டணங்களை (மார்ச் 2026 மாதத்திற்கான கட்டணம் உட்பட) செலுத்த முடியும்.
  • TY 2026–27 மற்றும் அதற்குப் பிந்தைய வரி ஆண்டுகளுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு “வருமானவரி சட்டம் 2025” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.2.6 அடுத்தடுத்த படிகள், பிந்தைய உள்நுழைவு திரைகளில் உள்ள படிகள் (படி எண் 3.1.5 முதல் 3.1.16 வரை) போலவே இருக்கும். ஆனால், இரு சட்டங்களின் கீழும் உள்ள வரி நிலுவைத் தொகைத் தலைப்புக்கான கட்டணம் செலுத்தும் வசதி உள்நுழைவுக்கு முன் சேவைகளில் கிடைக்காது.