Do not have an account?
Already have an account?

1. எந்தெந்த சூழ்நிலைகளில் தாமதப் பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை நிராகரிக்கப்படும்?

உங்கள் தாமத பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை ஏற்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அது முழுமையாக வருமான வரித்துறையின் விருப்புரிமைக்கும் தீர்மானத்திற்கும் உட்பட்டது. உங்கள் தாமதத்திற்கான காரணம் உண்மையானதும் நியாயமானதும் என்று வருமான வரித்துறை கருதினால், தாமத பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கையை வழங்கலாம்.

பின்வரும் காரணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால், வருமான வரித்துறை அதிகாரிகள் தாமதத்திற்கான பிழை பொறுத்தல் கோரிக்கையை ஏற்காமல் நிராகரிக்கலாம்:

  1. வரி செலுத்துபவர் தாமதத்திற்கான செல்லுபடியாகும் மற்றும் போதுமான காரணங்களை வழங்கத் தவறினால்;
  2. வரி செலுத்துபவர் தொடர்ந்து வருமான வரிச் சட்ட விதிகளைப் பின்பற்றாத வரலாறு கொண்டிருந்தாலோ, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாதிருந்தாலோ அல்லது வரியை உரிய நேரத்தில் செலுத்தத் தவறியிருந்தாலோ தாமத மன்னிப்பு கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.
  3. தாமத பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கையுடன் தேவையான ஆதார ஆவணங்கள் அல்லது சான்றுகளை வரி செலுத்துபவர் சமர்ப்பிக்கத் தவறினால், அந்தக் கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். எனவே, தாமதத்திற்குக் காரணமான சூழ்நிலையை நிரூபிக்கும் சான்றுகள் உள்ளிட்ட அனைத்து தேவையான ஆவணங்களையும் கட்டாயம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

2. வருமான வரித்துறை அதிகாரியிடமிருந்து தாமத பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை ஒப்புதல் பெற்ற பிறகு, வரி செலுத்துபவர் என்ன செய்ய வேண்டும்?

வருமானவரி அலுவலரிடமிருந்து பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கைக்கான ஒப்புதல் உத்தரவைப் பெற்றவுடன், வரி செலுத்துபவர் தனது வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

3. தாமத பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை ஒப்புதல் பெற்ற பிறகு, வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான படிகள் என்ன?

தாமத பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை ஒப்புதல் பெற்ற பிறகு, பின்வரும் படிகளைப் பின்பற்றி வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்:

  • உங்கள் வருமான வரி அறிக்கையைப் பதிவேற்றம் செய்யவும்.
  • பதிவேற்றம் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையை மின்னணு முறையில் சரிபார்க்கவும்