Do not have an account?
Already have an account?

1. நான் எனது PAN ஐ சரிபார்க்க வேண்டிய தேவை என்ன?
கீழ்கண்டவற்றிற்காக உங்கள் PAN ஐ நீங்கள் சரிபார்க்கலாம்:

  • PAN தரவுதளத்தில் உள்ள விவரங்களுடன் உங்கள் PAN அட்டையில் உள்ள விவரங்களான பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்கள் ஒத்துப்போகிறதா என்பதை சரிபார்ப்பதற்கு.
  • உங்கள் PAN செயலில் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு.


2. PAN சரிபார்ப்புக்கு மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள எனது அலைபேசி எண் எனக்குத் தேவைப்படுமா?
சரிபார்ப்பின்போது உங்கள் வசமுள்ள எந்தவொரு செல்லுபடியாகும் அலைபேசி எண்ணையும் நீங்கள் பயன்படுத்தலாம், அதில் நீங்கள் OTP ஐ பெறுவீர்கள் (15 நிமிடங்களுக்கு செல்லுபடியாகும், அதிகபட்சம் மூன்று முறை முயற்சிக்கலாம்).


3. தனிநபர் வரி செலுத்துபவர் ஒரு அலைபேசி வாயிலாக சரிபார்க்கக்கூடிய PANகளின் எண்ணிக்கையில் ஏதேனும் வரம்பு உள்ளதா?
ஆம், ஒரு அலைபேசி எண் வாயிலாக ஒரு நாளில் அதிகபட்சம் 5 வெவ்வேறு PANகளை நீங்கள் சரிபார்க்கலாம்.


4. ஒரு வெளி நிறுவனமாக ஒரு பயனரின் PAN ஐ நான் சரிபார்க்க முடியுமா?
ஆம், PAN சரிபார்ப்பு சேவையானது பதிவுசெய்யப்பட்ட பயனர்கள்; வெளி நிறுவனங்கள் உட்பட அனைவருக்கும் கிடைக்கிறது. மொத்தமாக PAN / TAN சரிபார்ப்பது வெளி நிறுவனங்களுக்கான தனிப்பட்ட சேவையாகும். இதற்கு வருமானவரித்துறையின் ஒப்புதல் தேவைப்படும்.


5. எனது PAN விவரங்களை ஆன்லைனில் எவ்வாறு காணலாம்?
நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கக்கூடிய உங்கள் PAN ஐ அறிந்து கொள்ளுங்கள் சேவையை பயன்படுத்தலாம். இந்த சேவையை உங்கள் PAN செல்லுபடியாகுமா இல்லையா என்பதை சரிபார்க்கவும் நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.