Do not have an account?
Already have an account?


1. தாக்கல் செய்யப்பட்ட எனது படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியுமா?
ஆம், மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > நிரப்பப்பட்ட படிவங்களை பார்வையிடு என்பதன் கீழ் உள்ள மின்னணு-தாக்கல் முகப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட படிவத்தின் PDF பதிப்பை நீங்கள் பதிவிறக்கலாம்.


2. தாக்கல் செய்யப்பட்ட படிவங்களை யார் பார்க்கலாம்?
மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்த யார் வேண்டுமானாலும் அவர்கள் தாக்கல் செய்த படிவங்களைப் பார்க்கலாம் அல்லது பதிவு செய்தவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாலும் அவர்களின் சார்பாக பார்க்க முடியும்.


3. 15CA / 15CB படிவத்தை எப்படி CA பார்க்க முடியும்?
CA உள்நுழைவு அல்லது TAN உள்நுழைவு உள்ள பயனர்கள் மின்னணு-தாக்கல் முகப்பில் உள்ள நிரப்பப்பட்ட படிவங்களை பார்வையிடு சேவையின் மூலம் படிவம் 15CA / 15CB ஐப் பார்க்கலாம்.


4. நிரப்பப்பட்ட படிவங்களை பார்வையிடு என்பதன் கீழ் எந்த படிவங்களை நான் பார்க்கலாம்?
உங்களாள் அல்லது உங்கள் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சட்டரீதியான படிவங்களையும் நீங்கள் பார்க்க முடியும். உங்கள் சார்பாக பட்டய கணக்காளர் (சி.ஏ.) தாக்கல் செய்த படிவங்கள் உங்களுக்கும் பட்டய கணக்காளருக்கும் (சி.ஏ.) காண்பிக்கப்படும்.


5. மின்னணு-தாக்கல் இணையமுகப்பில் நான் கைமுறையாக முன்பு தாக்கல் செய்த படிவத்தைப் பார்க்க முடியுமா?
இல்லை, மின்னணு-தாக்கல் முகப்பில் நீங்கள் கைமுறையாக தாக்கல் செய்த முந்தைய படிவங்களை உங்களால் பார்க்க முடியாது.


6. தாக்கல் செய்யப்பட்ட எனது படிவத்தை நான் எவ்வாறு திருத்த முடியும்?
படிவத்தை தாக்கல் செய்தவுடன் திருத்த முடியாது. இருப்பினும், வருமானவரிச் சட்டம் / விதிகளின்படி அதற்கான காலக்கெடு காலாவதியாகவில்லை என்றால், நீங்கள் புதிய படிவத்தை தாக்கல் செய்யலாம், மேலும் முன்பு தாக்கல் செய்யப்பட்ட படிவம் செல்லாது என்று கருதப்படும்.