Do not have an account?
Already have an account?

1. படிவம்-10B என்பது என்ன?
படிவம்-10A-ஐத் தாக்கல் செய்வதன் மூலம் வரி செலுத்துவோர் ஏற்கனவே தொண்டு அல்லது மதம்சார்ந்த அறக்கட்டளை / தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அல்லது விண்ணப்பித்திருந்தால் படிவம்-10B வரி செலுத்துவோருக்கு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய உதவுகிறது. படிவம்-10B எனது பட்டயக் கணக்கர் (CA) சேவையின்கீழ் வரி செலுத்துவோரால் சேர்க்கப்பட்ட மற்றும் தொடர்புடைய படிவம் ஒதுக்கப்பட்ட பட்டயக் கணக்கரால் (CA) அணுகப்படுகிறது .

2. படிவம்-10B-ஐ யார் பயன்படுத்தலாம்?
மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்த பயனர்களாக இருக்கும் பட்டயக் கணக்கர்கள்(CA) படிவம்-10B-ஐ அணுகலாம். மேலும், பட்டயக் கணக்கருக்கு (CA) வரி செலுத்துவோர் படிவத்தை அணுகுவதற்கும், திருத்துவதற்கும், மதிப்பாய்வு செய்வதற்கும் சமர்ப்பிப்பதற்கும் ஒதுக்க வேண்டும்.

3. படிவம்-10B எப்போது தாக்கல் செய்யப்பட வேண்டும்?
ஒரு அறக்கட்டளை அல்லது நிறுவனத்தின் மொத்த வருமானம் 11 மற்றும் 12 பிரிவுகளுக்கு உட்படுத்தாமல் கணக்கிடப்பட்டு, எந்தவொரு நிதியாண்டிலும் வருமான வரி விதிக்கப்படாத அதிகபட்ச தொகையை மீறும் போது, அந்த ஆண்டிற்கான கணக்குகள் ஒரு பட்டயக் கணக்கரால்(CA) தணிக்கை செய்யப்பட வேண்டும். இதற்கு அந்த நபர் வருமானம் பெற்றதற்கான வரவுச்சீட்டு, வருமான வரிப் படிவத்துடன், படிவம்-10B-ல் முறையாக பட்டயக் கணக்கரால் (CA) கையொப்பமிடப்-பட்ட சரிபார்க்கப்பட்ட அத்தகைய தணிக்கை அறிக்கையையும் அளிக்க வேண்டும்.

4. படிவம்-10B-ஐ ஆ ன்லைனில் தாக்கல் செய்வது கட்டாயமா?
ஆம், மதிப்பிட்டு ஆண்டு (AY) 2020-21 முதல், படிவம்-10B ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே கட்டாயமாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.

5. படிவம்-10B தாக்கல் செய்வதற்கான செயல்முறை என்ன?
படிவம்-10B ஒரு வரி செலுத்துவோரால் பட்டயக் கணக்கருக்கு(CA) ஒதுக்கப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட, செயலில் உள்ள மற்றும் செல்லுபடியாகும் மின்னணு கையெழுத்துச் சான்றிதழைப் (DSC) பயன்படுத்தி படிவத்தை பட்டயக் கணக்கரால் (CA) பதிவேற்றவும் மற்றும் மின்னணு சரிபார்க்கவும் முடியும். பிறகு, வரி செலுத்துவோர் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சமர்ப்பிக்கும் செயல்முறையை முடிக்க மின்னணுக் கையெழுத்துச் சான்றிதழ் (DSC) அல்லது மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டைப் (EVC) பயன்படுத்தி அதை மின்னணு-சரிபார்க்க வேண்டும்.