Do not have an account?
Already have an account?

1. EVC என்றால் என்ன?
மின்னணு சரிபார்ப்பு குறியீடு (EVC) என்பது 10 இலக்க ஆல்பாநியூமரிக் குறியீடாகும், இது ஒரு பொருளை மின்னணு முறையில் சரிபார்க்க, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைய அல்லது கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் பதிவுசெய்யப்பட்ட அலைபேசியில் அனுப்பப்படுகிறது. மின்னணு முறையில் ஒரு பொருளைச் சரிபார்க்க EVC ஐப் பயன்படுத்தலாம் (மின்னணு-சரிபார்க்க சட்டப்பூர்வ படிவங்கள், வருமானவரி அறிக்கைகளை மின்னணு-சரிபார்த்தல், திரும்பப்பெறுதல் மறு வெளியீட்டு கோரிக்கையை மின்னணு-சரிபார்த்தல், ஏதேனும் அறிவிப்புக்கு எதிரான பதில்), மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழையலாம் அல்லது கடவுச்சொல்லை மீட்டமைக்கலாம்.

2. வேறொருவருக்காக EVC ஐ நான் உருவாக்க முடியுமா அல்லது என் சார்பாக வேறு யாராவது EVC ஐ உருவாக்க முடியுமா?
ஒரு தனிப்பட்ட வரி செலுத்துவோர் சுயமாக EVC ஐ உருவாக்கலாம் மற்றும் குறிப்பிட்ட நிறுவனத்தின் முதன்மைத் தொடர்பாளரின் தனிநபர் இருந்தால் வேறு சில PAN (நிறுவனம் தவிர) அல்லது TAN ஐ உருவாக்க முடியும். வரி செலுத்தும் தனிநபரை வேறொரு PAN பயனர் தனது பிரதிநிதியாக அங்கீகரித்திருந்தால் குறிப்பிட்ட PANக்கு EVC ஐ உருவாக்க முடியும்.

3. ஒரு வணிக குழுமம் தங்கள் வருமானவரி படிவத்தை EVC மூலம் சரிபார்க்க முடியுமா?
இல்லை. EVC உருவாக்குவதன் மூலம் தங்கள் அறிக்கையை ஒரு நிறுவனம் சரிபார்க்க முடியாது. அவர்கள் DSC மூலம் தங்கள் வருமானவரி படிவத்தை சரிபார்க்க வேண்டும்.

4. நான் EVC ஐ உருவாக்க முயற்சிக்கும் போது என்னுடைய கணக்குடன் PAN ஐ கட்டாயம் இணைக்க வேண்டுமா?
ஆம், EVC ஐ உருவாக்க நீங்கள் எந்த கணக்கைப் பயன்படுத்துகிறீர்களோ அதனுடன் உங்கள் PAN எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
நீங்கள் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, இணைய வங்கி அல்லது வங்கி ATM மூலம் EVC ஐ உருவாக்குகிறீர்கள் என்றால், உங்கள் PAN எண்ணை அதே வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் டீமேட் கணக்கைப் பயன்படுத்தி EVC ஐ உருவாக்குகிறீர்கள் என்றால், அதே டீமேட் கணக்குடன் உங்கள் PAN ஐ இணைக்க வேண்டும்.

5. உருவாக்கப்பட்டEVCசெல்லுபடியாகும் கால அளவு என்ன?
உருவாக்கப்படும் EVC உருவாக்கப்பட்ட நேரத்திலிருந்து 72 மணி நேரம் செல்லுபடியாகும்.

6. மின்னணு-சரிபார்ப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட வருமானவரி படிவங்களை சரிபார்க்க 72 மணி நேரத்திற்குள் அதே EVC ஐ நான் பல முறை பயன்படுத்தலாமா?
இல்லை, மின்னணு-சரிபார்ப்பில் வெவ்வேறு வருமானவரி படிவங்களை சரிபார்க்க ஒரே EVC ஐ பயன்படுத்த முடியாது. நீங்கள் மின்னணு முறையில் சரிபார்க்க விரும்பும் ஒவ்வொரு பொருளுக்கும் புதிய EVC ஐ உருவாக்க வேண்டும்.

7. நான் EVC ஐ பயன்படுத்தி எனது வருமானத்தை சரிபார்த்தேன், நான் நேரடி ITR V ஐ CPC பெங்களூருவுக்கு அனுப்ப வேண்டுமா?
இல்லை. EVC கொண்டு உங்கள் வருமானவரி அறிக்கைகளை மின்னணு-சரிபார்த்தபிறகு, உங்கள் ITR-V பிரதியை CPC பெங்களூருக்கு நீங்கள் அனுப்பவேண்டியதில்லை.

8. ஒரு EVC ஐ உருவாக்க எனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த விரும்புகிறேன். நான் எந்த வங்கி கணக்கையும் பயன்படுத்தலாமா அல்லது மின்னணு-தாக்கல் முகப்பில் இணைக்கப்பட்டுள்ள ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டுமா?
மின்னணு-தாக்கல் முகப்பில் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்குடன் மட்டுமே நீங்கள் EVC ஐ உருவாக்க முடியும்.

9. சரிபார்ப்புக்காக நிலுவையில் உள்ள முன்னர் தாக்கல் செய்யப்பட்ட எனது வருமானவரி படிவங்களை நான் சரிபார்க்க முடியுமா?
ஆம், சரிபார்ப்புக்கான கால அவகாசம் காலாவதியாகவில்லை என்றால் அல்லது தாமதம் தகுதிவாந்த வருமானவரி அதிகார அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால்.

10. வங்கி தானியங்கி பண பரிமாற்று எந்திர (ATM) விருப்பத்தேர்வின் மூலம் EVC ஐ நான் எவ்வாறு உருவாக்குவது?
வங்கி ATM விருப்பம் மூலம் EVC உருவாக்க, உங்களிடம் குறிப்பிட்ட வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட PAN வேண்டும் மற்றும் அதே PAN மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பற்று அட்டையை தானியங்கி பண பரிமாற்று எந்திரத்தில் (ATM) தேய்த்து/செருகி "வருமானவரி தாக்கல் செய்வதற்கான பின்" என்னும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு EVC அனுப்பப்படும். மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு EVC அனுப்பப்படும்.

11. வங்கி கணக்கு மூலம் EVC ஐ உருவாக்க எந்தெந்த வங்கிகள் என்னை அனுமதிக்கும்?
மின்னணு-தாக்கல் முகப்பில் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்வரும் வங்கிகளில் ஏதேனும் ஓன்றின் மூலம் நீங்கள் EVC ஐ உருவாக்கலாம்:

  • அலகாபாத் வங்கி
  • ஆந்திரா வங்கி
  • பாங்க் ஆஃப் பரோடா
  • கனரா வங்கி
  • சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
  • ஃபெடரல் வங்கி
  • எச்.டி.எஃப்.சி. வங்கி
  • ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி
  • ஐ.டி.பி.ஐ. வங்கி
  • கரூர் வைஸ்யா வங்கி
  • கோட்டக் மஹிந்திரா வங்கி
  • ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ்
  • பஞ்சாப் நேஷனல் வங்கி
  • சரஸ்வத் வங்கி
  • சௌத் இந்தியன் வங்கி
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
  • சிண்டிகேட் வங்கி
  • UCO வங்கி
  • யூனியன் பாங்க் ஆப் இந்தியா
  • யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா

12. எனது வங்கி கணக்கு அல்லது டீமேட் கணக்கைப் பயன்படுத்தி EVC ஐ உருவாக்கும் முன் எனது வங்கி கணக்கு அல்லது எனது டீமேட் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டுமா?
ஆம், EVC ஐ உருவாக்குவதற்கு முன் உங்கள் வங்கி கணக்கு அல்லது உங்கள் டீமேட் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும்.