Do not have an account?
Already have an account?

1. மின்னணு-தாக்கல் முகப்பில் நான் ஏன் என்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்?
பயன்பாட்டில் இருக்கும் PAN கொண்ட அனைத்து வரி செலுத்துவோருக்கும் பதிவு செய்துகொள்ளும் செயல்பாடு கிடைக்கிறது. மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்வதன் மூலம் உங்களால் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் வரி தொடர்பான சேவைகளைப் பயன்படுத்த இயலும்.

2. பதிவு செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?
வரி செலுத்துபராகப் [வியாபார நிறுவனம் தவிர்த்து] பதிவு செய்வதற்கு எந்தவிதமான ஆவணங்களும் தேவையில்லை. பயன்பாட்டில் இருக்கும் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி, பயன்பாட்டில் உள்ள PAN மட்டுமே முற்படு தேவைகளாகும்.

3. நான் என்னுடைய குடும்ப உறுப்பினர் சார்பாகப் பதிவு செய்யலாமா?
நீங்கள் கொடுத்த PAN மற்றும் முதன்மைத் தொடர்பு விவரங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது. PAN ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பதிவு செய்யப்படவேண்டும்.

4. நான் வெளிநாடு வாழ் அலைபேசி எண் இல்லாத இந்தியர். நான் மின்னணுத் தாக்கல் முகப்பில் பதிவு செய்ய இயலுமா? நான் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்ய இயலுமா?
நிச்சயமாக. நீங்கள் பதிவு செய்யும்போது உங்களுடைய அயல்நாட்டு அலைபேசி எண்ணைக் கொடுத்துப் பதிவு செய்து கொள்ளலாம். அனைத்துத் தகவல்களும் நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் ID மூலமாகத் தெரிவிக்கப்படும், ஆனால் அயல்நாட்டு அலைபேசி எண்ணிற்குத் தெரிவிக்கப்படமாட்டாது. அனைத்து OTPகளும் மின்னஞ்சல் IDக்கு மட்டுமே அனுப்பப்படும்.

5. இந்தச் சேவையைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் முகப்பில் யாரெல்லாம் பதிவு செய்யலாம்?
பயன்பாட்டில் உள்ள PAN வைத்திருக்கும் வரி செலுத்துவோர் அனைவரும் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யலாம்.