Do not have an account?
Already have an account?

1. வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய ITDயின் ஆஃப்லைன் பயன்பாடுகளை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
ITR ஐத் தாக்கல் செய்யத் தகுதியுள்ள அனைத்து நபர்களும் ITR களுக்கான ஆஃப்லைன் பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்து படிவங்களை தாக்கல் செய்யப் பயன்படுத்தலாம்.

2. ITR களுக்கான AY 2021-22 இல் ITD இன் ஆஃப்லைன் பயன்பாட்டில் என்ன புதிதாய் உள்ளது?

  • மதிப்பீட்டு ஆண்டு (AY) 2021-22 முதல், முன்-நிரப்பப்பட்ட தரவுகளுக்கான கோப்பின் வடிவம் அல்லது பதிவேற்றத்திற்கான பயன்பாட்டால் உருவான கோப்பின் வடிவம் XML ஆக இருக்காது, அது இப்போது JSON வடிவத்தில் உள்ளது.
  • பயனர்கள் தங்களது முன்-நிரப்பப்பட்ட தரவை நேரடியாக ஆஃப்லைன் பயன்பாட்டில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மின்னணு-தாக்கல் முகப்பில் இருந்து தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட JSON லிருந்து முன்-நிரப்பப்பட்ட தரவை இறக்குமதி செய்யலாம். முன்னர், முன்-நிரப்பப்பட்ட XMLஐ இறக்குமதி செய்ய ஒரு வழி மட்டுமே இருந்தது.
  • ஆஃப்லைன் பயன்பாட்டில் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது - ஆன்லைன் முறையில் நிரப்பப்பட்ட வரைவு ITRஐ இறக்குமதி செய்வது நீங்கள் ஏற்கனவே ஆன்லைன் முறையில் ஓரளவு நிரப்பியிருக்கும் உங்கள் படிவத்தை (தற்போது ITR-1 மற்றும் ITR-4க்குக் கிடைக்கிறது), தாக்கல் செய்யும் முறையை ஆன்லைனிலிருந்து ஆஃப்லைனுக்கு மாற்ற விரும்பினால் இந்த விருப்பத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • மதிப்பீட்டு ஆண்டு (AY) 2021-22 க்கு முன்பு, பயனர்கள் அவர்கள் தயாரித்த படிவத்தின் XMLஐ உருவாக்கி, மின்னணு-தாக்கல் முகப்பில் சமர்ப்பிப்பதற்காக அதை பதிவேற்ற வேண்டும். புதிய ஆஃப்லைன் பயன்பாட்டின் மூலம், பயனர்கள் தங்கள் வருமான வரி அறிக்கைகள் / படிவங்களைப் பயன்பாட்டிலிருந்தே நேரடியாக சமர்ப்பிக்கலாம் மற்றும் சரிபார்க்கலாம். பயனர்களுக்கு தங்கள் படிவங்களை சமர்ப்பிக்க JSON ஒன்றை உருவாக்கி, மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவேற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

3. ITDஇன் ஆஃப்லைன் பயன்பாட்டின் 'பல்வேறு இறக்குமதி விருப்பங்கள்' என்றால் என்ன?
வருமானவரி படிவங்களுக்கான உங்களின் முன்-நிரப்பப்பட்ட தரவுடன் JSON ஐ இறக்குமதி செய்ய உங்களுக்கு பலதரப்பட்ட விருப்பத்தேர்வுகள் உள்ளன:

  • முன்-நிரப்பப்பட்ட படிவத்தை பதிவிறக்குக - நீங்கள் உள்ளிட்ட உங்கள் PAN மற்றும் மதிப்பீட்டு ஆண்டின் அடிப்படையில், உங்களின் முன்-நிரப்பப்பட்ட தரவு உங்கள் ITR படிவத்தில் பதிவிறக்கம் செய்யப்படும்.
  • முன்-நிரப்பப்பட்ட JSON ஐ இறக்குமதி செய்தல் - ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட JSON ஐ ஆஃப்லைன் பயன்பாட்டில் இணைத்தவுடன், உங்களின் முன் நிரப்பப்பட்ட தரவு உங்கள் ITR படிவத்தில் பதிவிறக்கம் செய்யப்படும்.

4. நான் எனது வருமான வரி அறிக்கையின் பெரும்பகுதியை ஆன்லைன் முறையில் நிரப்பிவிட்டேன், ஆனால் நான் ஆஃப்லைன் பயன்முறைக்கு மாற விரும்புகிறேன். எனது தரவை ஆஃப்லைன் பயன்பாட்டிற்கு மாறுதல் செய்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா?
ஆம், நீங்கள் உங்கள் படிவத்தை ஏற்கனவே ஆன்லைன் முறையில் ஓரளவு நிரப்பிய பின், தாக்கல் செய்யும் முறையை ஆன்லைனில் இருந்து ஆஃப்லைனுக்கு மாற்ற விரும்பினால். ஆன்லைன் முறையில் நிரப்பப்பட்ட வரைவு ITRஐ இறக்குமதி செய்யவும் என்னும் விருப்பத்தேர்வை பயன்படுத்தலாம் இது ஆன்லைன் முறையில் கிடைக்கும் ITRகளுக்குப் பொருந்தும், தற்போது ITR-1 மற்றும் ITR-4க்கு மட்டுமே கிடைக்கிறது.

5. ஆஃப்லைன் பயன்பாட்டைப் பயன்படுத்தி ITRகளைத் தாக்கல் செய்யும் போது எனது ITRஇல் நான் தவறு செய்திருந்தால் அதை நான் எவ்வாறு அறிவது?
ஆன்லைன் படிவங்களுக்குப் பொருந்தும் அனைத்து சரிபார்ப்பு விதிகளும், நீங்கள் அவற்றை இணைய முகப்பில் சமர்ப்பித்தாலும் அல்லது ஆஃப்லைன் பயன்பாட்டிலிருந்து நேரடியாக சமர்பித்தாலும் பொருந்தும். ஏதேனும் தவறு ஏற்பட்டால், கணினி அமைப்பிலிருந்து பிழை செய்தியைப் பெறுவீர்கள், மேலும் படிவத்தின் பிழைகள் உள்ள புலங்கள் முன்னிலைப்படுத்தப்படும். நீங்கள் உங்களின் JSON கோப்பை ஏற்றுமதி செய்து பதிவேற்றினால், பதிவிறக்கம் செய்யக்கூடிய பிழைக் கோப்பு உருவாக்கப்படும், தவறுகளைச் சரிசெய்ய நீங்கள் இதை நாடலாம்.

6. ஆஃப்லைன் பயன்பாட்டில் உள்நுழையும்படி தூண்டப்படும்போது எந்த பயனர் அடையாளத்தை வழங்க வேண்டும்?
உள்நுழைய தூண்டப்படும்போது வெவ்வேறு வகையான பயனர்களுக்கு வெவ்வேறு பயனர் அடையாளங்கள் தேவை. Individual and non-individual taxpayers need to use PAN as their user ID. Chartered Accountants (CAs) need to use ARCA + 6-digit membership number as their user ID. Tax Deductors & Collectors need to use TAN as their user ID.

7. JSON கோப்பு என்பது என்ன?
JSON என்பது ஒரு கோப்பு வடிவமாகும், இது உங்கள் முன்-நிரப்பப்பட்ட படிவ தரவை ஆஃப்லைன் பயன்பாட்டிற்குப் பதிவிறக்கம் / இறக்குமதி செய்யும் போது பயன்படுத்தப்படுகிறது, மேலும் நீங்கள் தயாரித்த ITR ஐ ஆஃப்லைன் பயன்பாட்டில் உருவாக்கும் போதும் இது பயன்படுத்தப்படுகிறது.

8. ஆஃப்லைன் பயன்பாட்டில் ஒரு கோப்பு வடிவமாக JSON ஐக் கொண்டிருப்பதன் நன்மை என்ன?
XML கோப்புகளுடன் ஒப்பிடும்போது JSON ஒரு கோப்பு வடிவத்தில் பல தொழில்நுட்ப நன்மைகளைக் கொண்டுள்ளது. தரவைச் சேமிப்பதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் இது ஒரு இலகுவான வடிவமாகும் மேலும், இது XML கோப்புகளைக் காட்டிலும் வேகமாக செயலாக்கப்படுகிறது.