1. வருமான வரி சட்டரீதியான படிவங்களை தாக்கல் செய்ய ITD-யின் அகல்நிலை பயன்பாட்டை யார் பயன்படுத்தலாம்?
எந்தவொரு மின்னணு-தாக்கல் பயனரும் ITR மற்றும் சட்டரீதியான படிவங்களுக்கான அகல்நிலை பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து அடையலாம், ஆனால் படிவங்களை பின்வரும் பயனர்களால் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்:
- வரி செலுத்துவோர்
- பட்டய கணக்காளர்கள்
- வரி பிடித்தம் மற்றும் வசூலிப்போர்
2. நான் ஒரு பட்டய கணக்காளர். அகல்நிலை பயன்பாட்டில் எனது உள்நுழைவு சான்றுகளை பயன்படுத்தி எனது வாடிக்கையாளருக்கான வருமான வரி படிவங்களை நான் தாக்கல் செய்யலாமா?
உங்கள் உள்நுழைவு சான்றுகளை பயன்படுத்தி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட படிவங்களை மட்டுமே நீங்கள் தாக்கல் செய்ய முடியும்.
3. சட்டரீதியான படிவங்களுக்கு AY 2021-22 இல் ITD இன் அகல்நிலை பயன்பாடு குறித்து புதிதாய் என்ன இருக்கிறது?
- AY 2021-22 முதல், முன் நிரப்பப்பட்ட தரவுகளுக்கான கோப்பு வடிவம் XML அல்லது பதிவேற்றத்திற்காக பயன்பாடில் உருவாக்ககூடிய கோப்பு இனி XML வடிவத்தில் இருக்காது, இது இப்போது JSON வடிவத்தில் உள்ளது.
- பயனர்கள் தங்களது முன் நிரப்பப்பட்ட தரவை நேரடியாக அகல்நிலை பயன்பாட்டிற்குள் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது தங்கள் கணினியில் மின்னணு-தாக்கல் முகப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட JSON ல் இருந்து முன் நிரப்பப்பட்ட படிவத்தை இறக்குமதி செய்யலாம். முன்னதாக, முன் நிரப்பப்பட்ட XML ஐ இறக்குமதி செய்ய ஒரே வழிதான் இருந்தது.
- AY 2021-22 க்கு முன்பு, பயனர்கள் அவர்கள் தயாரித்த படிவத்தின் XML ஐ உருவாக்கி மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். புதிய அகல்நிலை பயன்பாட்டில், பயனர்கள் தங்கள் படிவங்களை பயன்பாட்டிலிருந்து நேரடியாக சமர்ப்பிக்கவும் சரிபார்க்கவும் முடியும். பயனர்கள் ஒரு JSON ஐ உருவாக்கி, மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவேற்றி தங்கள் படிவத்தை சமர்ப்பிக்கும் விருப்பத் தேர்வு இன்னும் இருக்கிறது.
4. சட்டரீதியான படிவங்களுக்காக ITD-யின் அகல்நிலை பயன்பாட்டைப் பயன்படுத்தும் போது பல்வேறு இறக்குமதி விருப்பத் தேர்வுகள் என்றால் என்ன?
வருமான வரி படிவங்களுக்கான உங்கள் முன்-நிரப்பப்பட்ட தரவுடன் JSON ஐ இறக்குமதி செய்ய உங்களுக்கு பல விருப்பத் தேர்வுகள் உள்ளன:
- முன்- நிரப்பப்பட்ட படிவத்தைப் பதிவிறக்குங்கள் – உங்கள் உள்நுழைவு சான்றுகள் மற்றும் OTP சரிபார்ப்பு (மற்றும் ஒப்புதல் எண்/பரிவர்த்தனை ID/பிற விவரங்கள் போன்றவை) அடிப்படையில், முன் நிரப்பப்பட்ட தரவு உங்கள் படிவத்தில் பதிவிறக்கம் செய்யப்படும்.
- Import Pre-filled JSON – Attach your already downloaded JSON into the offline utility, and based on your PAN/TAN/Form no./AY, your pre-filled data gets downloaded into your form.
5. அகல்நிலை பயன்பாட்டை பயன்படுத்தி தாக்கல் செய்யும் போது எனது ITR/சட்டரீதியான படிவத்தில் நான் தவறு செய்திருக்கிறேனா என்பது எனக்கு எப்படித் தெரியும்?
நிகழ்நிலை படிவங்களுக்கு பொருந்தும் அனைத்து சரிபார்ப்பு விதிகளும் நீங்கள் அவற்றை முகப்பில் சமர்ப்பித்தாலும் அல்லது அகல்நிலை பயன்பாட்டிலிருந்து நேரடியாக சமர்ப்பித்தாலும் பொருந்தும். ஏதேனும் தவறு இருந்தால், நீங்கள் கணினியிலிருந்து பிழை செய்தியைப் பெறுவீர்கள், மேலும் பிழைகள் உள்ள புலங்கள் படிவத்தில் சூட்டிக்காட்டப்படும். உங்கள் JSON கோப்பை ஏற்றுமதி செய்து பதிவேற்றினால், பதிவிறக்கம் செய்யக்கூடிய பிழைக் கோப்பு உருவாகும், தவறுகளை சரிசெய்ய இதை நீங்கள் குறிப்பிடலாம்.
6. அகல்நிலை பயன்பாட்டில் உள்நுழையும்படி நினைவூட்டப்படும்போது என்ன பயனர் அடையாளம் (ID) வழங்கப்பட வேண்டும்?
வரி செலுத்துவோருக்கு, உள்நுழைவதற்கான பயனர் அடையாளம் (ID) நிரந்தர கணக்கு எண் (PAN) ஆகும். பட்டய கணக்காளர்கள் அல்லது CA கள் ARCA + 6 இலக்க உறுப்பினர் எண்ணைப் பயன்படுத்த வேண்டும். வரி பிடித்தம் மற்றும் வசூல் செய்வோர் வரிபிடித்தம் & வசூல் கணக்கு எண்ணை (TAN ஐப்) பயன்படுத்த வேண்டும்.
7. சட்டரீதியான படிவங்களுக்கான அகல்நிலை பயன்பாட்டை பயன்படுத்தி அனைத்து படிவங்களையும் தாக்கல் செய்ய முடியுமா?
அகல்நிலை பயன்பாட்டைப் பயன்படுத்தி தாக்கல் செய்யக்கூடிய படிவங்கள் பின்வருமாறு:
- படிவம் 15CA (பகுதி A, B, C and D)
- படிவம் 15CB
- படிவம் 3CA-CD, படிவம் 3B-CD, படிவம் 3CEB
- படிவம் 29B, படிவம் 29C
- படிவம் 15G, படிவம் 15H
- படிவம் 15CC
- படிவம்-V