Do not have an account?
Already have an account?

1. படிவம்-10E என்பது என்ன?
நிலுவைத் தொகையைப் பெற்றால் அல்லது சம்பளத்தில் ஏதேனும் ஒரு பகுதித் தொகை முன்கூட்டியே பெறப்பட்டதாக இருந்தால், வருமானவரி சட்டப் பிரிவு 89 இன் கீழ் நிவாரணம் கோரலாம். அத்தகைய நிவாரணத்தைக் கோர, வரி செலுத்துபவர் படிவம்-10E ஐத் தாக்கல் செய்ய வேண்டும். வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்வதற்கு முன் படிவம்-10E ஐத் தாக்கல் செய்வது நல்லது.


2. படிவம்-10E-ஐப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க வேண்டுமா?
இல்லை, மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு சமர்ப்பிப்பை ஆன்லைனில் செய்ய முடியும் என்பதால் படிவம்-10E ஐப் பதிவிறக்க வேண்டிய அவசியமில்லை.

3. நான் எப்போது படிவம்-10E-ஐத் தாக்கல் செய்ய வேண்டும்?
உங்கள் வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்வதற்கு முன்பு படிவம்-10E ஐத் தாக்கல் செய்வது நல்லது.

4. படிவம்-10E ஐக் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டுமா?
ஆம், உங்கள் நிலுவைத் தொகை / மற்றும் முன்கூட்டிய சம்பள வருமானத்துக்கு வரி நிவாரணம் பெற விரும்பினால் படிவம்-10E ஐத் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

5. எனது வருமானவரிப் படிவத்தில் (ITR இல்) பிரிவு-89 இன் கீழ் நிவாரணம் கோரியுள்ளேன், ஆனால் படிவம்-10E ஐத் தாக்கல் செய்யத் தவறி விட்டேன் என்றால் என்ன நடக்கும்?
நீங்கள் படிவம்-10E ஐத் தாக்கல் செய்யத் தவறி இருந்து, உங்கள் வருமானவரிப் படிவத்தில் (ITR) பிரிவு-89 இன் கீழ் நிவாரணம் கோருகிறீர்கள் என்றால், உங்கள் வருமானவரிப் படிவம் (ITR) செயலாக்கப்படும். ஆனால் பிரிவு-89 இன் கீழ் நிவாரணம் அனுமதிக்கப்ட மாட்டாது.

6. எனது வருமானவரிப் படிவத்தில் (ITR) நான் கோரிய நிவாரணத்தை வருமானவரித் துறை (ITD) அனுமதிக்கவில்லை என்பதை நான் எப்படி அறிவேன்?
நீங்கள் கோரிய நிவாரணம் 89-பிரிவின் கீழ் வருமானவரித் துறையால் அனுமதிக்கப்படாவிட்டால், உங்கள் வருமானவரிப் படிவம் (ITR) செயலாக்கம் முடிந்தபின், வருமானவரித் துறையால் (ITD) ஒரு தகவல் வருமான வரிச் சட்டம் 143(1)-பிரிவின் கீழ் தெரிவிக்கப்படும்.

 

7. வரிகளைக் கணினி எவ்வாறு கணக்கிடுகிறது?

மதிப்பீட்டு ஆண்டு 2024-25 (நிதி ஆண்டு 2023-24) முதல் வரி கணக்கீடுகளுக்கு, "கணினியால் கணக்கிடப்பட்ட வரி" என்பது நடப்பு வரி விதிப்புமுறையின்படி அதாவது புதிய வரி விதிப்புமுறை (பிரிவு 115BAC(1A)) பொருந்தும். இருப்பினும், மதிப்பீட்டு ஆண்டு 2023-24 (நிதி ஆண்டு 2022-23) வரையிலான முந்தைய ஆண்டுகளுக்கான வரி கணக்கீடுகள் பழைய வரி விதிப்புமுறையின்படி உள்ளன.