Do not have an account?
Already have an account?

1. படிவம்-10-ID என்றால் என்ன?
புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 115BAB இன் கீழ் 15% (அதோடு பொருந்தக்கூடிய கூடுதல் கட்டணம் மற்றும் வரியின் மீதான வரி) சலுகை வரி விகிதத்தில் வரி செலுத்தத் தேர்வு செய்யலாம். அவ்வாறு செய்வதற்கு, நன்மைகளை பெற 2020 ஏப்ரல் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் முதல் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்காக பிரிவு-139-ன் துணைப்பிரிவு-(1)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் அல்லது அதற்கு முன் படிவம்-10-ID ஐத் தாக்கல் செய்வது அவசியம்.

2. படிவம்-10-ID-ஐ யார் தாக்கல் செய்ய வேண்டும்?
2019 அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு நிறுவப்பட்டு 2023 மார்ச் 31 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஒரு தயாரிப்பு அல்லது ஒரு பொருளைத் தயாரிக்கவோ அல்லது உற்பத்தி செய்யவோ தொடங்கிய ஒரு புதிய உற்பத்தி உள்நாட்டு நிறுவனம்,, சலுகை விகிதத்தில் வரி விதிக்கப்படும் விருப்பத் தேர்வைச் செய்தால், அது படிவம்-10-ID-ஐத் தாக்கல் செய்ய வேண்டும்.

3. பொருந்தக்கூடிய அனைத்து வரி செலுத்துவோர் (உள்நாட்டு நிறுவனங்கள்) படிவம்-10-ID-ஐத் தாக்கல் செய்வது கட்டாயமா?
வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு-115BAB-ன் கீழ் ஒரு உள்நாட்டு நிறுவனம் 15% (கூடுதலாக பொருந்தக்கூடிய கூடுதல் கட்டணம் மற்றும் வரியின் மீதான வரி)
சலுகை வரி விகிதத்தைத் தேர்வுசெய்தால் மட்டுமே படிவம்-10-ID தாக்கல் செய்ய வேண்டும்.

4. படிவம்-10-ID-ஐ நான் எவ்வாறு தாக்கல் செய்து சமர்ப்பிக்கலாம்?
படிவம்-10-ID-ஐ ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே (மின்னணுத் தாக்கல் இணைய முகப்ப்பின் மூலம்) தாக்கல் செய்ய முடியும்.

5. இந்தப் படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு என்ன?
வருமான வரிப் படிவம் (ITR) தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்கு முன் படிவம்-10-ID-ஐ நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

6. அடுத்த மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவத்தை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டுமா?

7. படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்று எனக்கு எப்படித் தெரியும்?
மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் அடையாளம் மற்றும் மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் பெறுவீர்கள். கூடுதலாக, உங்கள் செயல்கள் தாவலின் கீழ் உங்கள் பணிப்பட்டியலில் நிலையையும் காணலாம்.

8. படிவம்-10-ID-ஐ சமர்ப்பிக்க மின்னணு-சரிபார்ப்பு அவசியமா? ஆம் எனில், படிவம்-10-ID-ஐ நான் எவ்வாறு சரிபார்க்க முடியும்?
ஆம், படிவம்-10-ID-ஐ மின்னணு-சரிபார்ப்பது அவசியம். டிஜிட்டல் கையொப்ப சான்றிதழைப் பயன்படுத்தி நீங்கள் மின்னணு-சரிபார்க்கலாம்.