1. மேலோட்ட பார்வை
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 115JB இன் கீழ் விதிக்கப்பட்டுள்ளபடி, ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டுக்குப் பட்டயக் கணக்காளரால் (CA) சான்றளிக்கப்பட்ட கணக்குப்புத்தக இலாபங்களை வெளியிடப் படிவம்-29B வியாபார நிறுவனங்களுக்கு உதவுகிறது. இந்தப் படிவத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயன்முறையிலும் தாக்கல் செய்யலாம். படிவம்-29B, வருமானவரிச் சட்டப் பிரிவு 139(1) இன் கீழ் தாமாக முன்வந்து வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அல்லது 142(1)(i) பிரிவின் கீழான ஒரு நோடீசுக்குப் பதிலளித்து தாக்கல் செய்யப்படும் வருமான வரிப் படிவத்துடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
2. இந்த சேவையைப் பெறுவதற்கான முன் நிபந்தனைகள்
- பயன்பாட்டில் உள்ள பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் வரி செலுத்துவோர் மற்றும் பட்டயக் கணக்காளர் (CA) மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்
- வரி செலுத்துபவர் மற்றும் பட்டயக் கணக்காளரின் (CA) PAN நிலை பயன்பாட்டில் உள்ளது
- வரி செலுத்துவோர் எனது பட்டயக் கணக்காளரின் (CA) கீழ் படிவம் 29Bக்கு பட்டயக் கணக்காளரை (CA) நியமித்திருக்க வேண்டும்
- பட்டயக் கணக்காளர் (CA) மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயன்பாட்டில் உள்ள மின்னணு கையொப்பச் சான்றிதழ் (DSC) இருக்க வேண்டும். அது காலாவதியாகி இருக்கக் கூடாது.
3. படிவத்தைப் பற்றி
3.1 நோக்கம்
வருமானவரிச் சட்டம், 1961 இன் விதிகளின்படி கணக்குப் புத்தக இலாபங்கள் கணக்கிடப்பட்டுள்ளன என்பதைச் சான்றளிப்பதற்காக எல்லாக் குழுமங்களும் படிவம் 29B இல், அங்கீகரிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் (CA) மூலம் ஒரு அறிக்கையைப் பெற வேண்டும்.
3.2 இதை யார் பயன்படுத்தலாம்?
படிவம் 29B வடிவத்தில் தணிக்கை அறிக்கையை வழங்கும் ஒரு பட்டயக் கணக்காளரை (CA) நிறுவனங்கள் (பிந்தைய உள்நுழைவிற்கு எனது பட்டயக் கணக்காளர் (CA) சேவையைப் பயன்படுத்தி) நியமிக்க வேண்டும். அதன்பிறகு, அந்தப் பட்டயக் கணக்காளர் (CA) ஒரு தணிக்கை அறிக்கையை வழங்குவதற்கான கோரிக்கையை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் மற்றும் (ஏற்றுக்கொள்ளப்பட்டால்) படிவம் 29B ஐத் தயாரித்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
4. படிவம் பற்றிய ஒரு பார்வை
படிவம்-29B மூன்று பகுதிகள் – பகுதி-A, பகுதி-B / பகுதி-C மற்றும் தணிக்கை அறிக்கை. இந்தப் படிவத்தில் மூன்று பாகங்களுடன் இணைப்புகள் உள்ளன. முதல் பகுதி எல்லாக் குழுமங்களுக்கும் பொருந்தும், இரண்டாவது மற்றும் மூன்றாம் பகுதிகள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பொருந்தும்.
படிவத்தை நிரப்பத் தொடங்குவதற்கு முன், பகுதி-B மற்றும் பகுதி-C / பொருந்தக்கூடியதாக இருந்தால் பதிவுசெய்யப்பட்ட பட்டயக் கணக்கர் (CA) விவரங்கள் கேட்கப்படும், அதன்படி அந்தப் பகுதிகள் நிரப்புவதற்குக் கிடைக்கும்.
4.1 பகுதி-A
முதல் பகுதியில் எல்லாக் குழுமங்களுக்கும் பொருந்தக்கூடிய கணக்குப் புத்தக இலாபங்களின் பொதுவான விவரங்கள் உள்ளன.
4.2 பகுதி-B / பகுதி-C
பிரிவு-115JB-ன் துணைப்பிரிவு-(2A)-க்கு ஏற்ப அதிகரிக்க / குறைக்க வேண்டிய தொகை விவரங்களை பகுதி-B கொண்டுள்ளது. பிரிவு-115JB-ன் துணைப்பிரிவு-(2C)-க்கு ஏற்ப அதிகரிக்க / குறைக்க வேண்டிய தொகை விவரங்களை பகுதி-C கொண்டுள்ளது.
4.3 ஒரு கணக்காளரின் அறிக்கை
இறுதிப் பகுதி பட்டயக் கணக்கரின் (CA) தணிக்கை அறிக்கை.
5. எப்படி அணுகுவது மற்றும் சமர்ப்பிப்பது
படிவம்-29B பின்வரும் முறைகள் மூலம் நிரப்பப்பட்டுச் சமர்ப்பிக்கப்படலாம்:
- ஆன்லைன் பயன்முறை - மின்னணு-தாக்கல் இணைய முகப்பு மூலம்
- ஆஃப்லைன் பயன்முறை - ஆஃப்லைன் பயன்பாடு மூலம்
குறிப்பு: மேலும் அறிய ஆஃப்லைன் பயன்பாடு (சட்டரீதியான படிவங்கள்) பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
ஆன்லைன் பயன்முறை மூலம் படிவம்-29B-ஐ நிரப்பவும் சமர்ப்பிக்கவும் பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
5.1. வரி செலுத்துவோர் படிவம்-29B-ஐ ஒதுக்குதல்
படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பக்கத்தில், மின்னணு-தாக்கல் > வருமானவரிப் படிவங்கள் > வருமானவரிப் படிவங்கள் தாக்கல் செய்தல் என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
படி 3: கிடைக்கும் படிவ ஓடுகளிலிருந்து படிவம்-29B-ஐத் தேர்ந்தெடுக்கவும். எனது பட்டயக் கணக்காளர் (CA) சேவையைப் பயன்படுத்தி ஒரு பட்டயக் கணக்காளரை (CA) நியமிக்கலாம் (நீங்கள் எந்த பட்டயக் கணக்காளரையும் (CA) நியமிக்கவில்லை என்றால்).
குறிப்பு: மேலும் அறிய எனது CA பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
படி 4: மதிப்பீட்டு ஆண்டைக் குறிப்பிடவும், எனது பட்டயக் கணக்காளர் (CA) சேவையைப் பயன்படுத்தி பட்டயக் கணக்காளரை (CA) நியமிக்கவும். துணை ஆவணங்களை இணைத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிவம் பட்டயக் கணக்கருக்கு(CA) வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது. பரிவர்த்தனை அடையாளத்துடன் ஒரு வெற்றி செய்தி காட்டப்படும். எதிர்கால குறிப்புக்காக பரிவர்த்தனை அடையாளத்தை உடன் குறித்து வைத்துக் கொள்ளவும்.
5.2. பட்டயக் கணக்காளர் (CA) மூலம் படிவம் 29B தாக்கல் செய்தல்
படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையில், நிலுவையில் உள்ள செயல்கள்> பணிப்பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: படிவம் 29B ஐத் தாக்கல் செய்வதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொள் அல்லது நிராகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- நீங்கள் நிராகரிக்க தேர்வு செய்தால், தொடர்புடைய காரணத்தை நீங்கள் வழங்கலாம்.
- நிராகரிப்பின் போது, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி (SMS) மூலம் வரி செலுத்துவோருக்கு மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும், இது நிராகரிப்பதற்கான காரணங்களின் விவரங்களை வழங்கும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு ஒரு வெற்றி செய்தி காட்டப்படும்.
படி 4: உங்கள் பணிப்பட்டியலில் படிவத்தைத் தாக்கல் செய்க என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 5: விவரங்களைச் சரிபார்த்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: அறிவுறுத்தல்கள் பக்கத்தில், தொடங்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 7: பொருத்தமான விருப்பங்களை கிளிக் செய்வதன் மூலம் படிவம்-29B இன் பகுதி B மற்றும் C இன் பொருந்தக்கூடிய தன்மையைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: பொருந்தும் பகுதிகள் மட்டும், உங்கள் தேர்வின் படி படிவம் எண். 29B பக்கத்தில் தோன்றும்.
படி 8: பொருந்தக்கூடிய பிரிவுகளுக்கு தேவையான அனைத்து புலங்களையும் நிரப்பவும் – பகுதி-A, பகுதி-B /பகுதி-C மற்றும் ஒரு கணக்காளரின் அறிக்கை மற்றும் முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 9: முன்னோட்டம் பக்கத்தில், மின்னணு-சரிபார்ப்பதற்கு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 10: உறுதிப்படுத்த ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 11: ஆம், என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் மின்னணு-சரிபார்த்தல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
குறிப்பு: மேலும் அறிய மின்னணு-சரிபார்ப்பது எப்படி என்பது பற்றிய பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
வெற்றிகரமான மின்னணு - சரிபார்ப்புக்குப் பிறகு, பரிவர்த்தனை IDயுடன் வெற்றி செய்தி காட்டப்படும். வெற்றிகரமாக சமர்ப்பித்தவுடன், வரி செலுத்துவோரின் ஏற்றுக்கொள்வது / நிராகரிப்பதற்காக மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோரின் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணுக்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படுகிறது.
5.3. வரி செலுத்துவோர் பூர்த்தி செய்த படிவம்-29B-ஐ ஏற்றுக்கொள்ளுதல்
படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையில், நிலுவையில் உள்ள செயல்கள்> பணிப்பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: பட்டயக் கணக்காளர் (CA) பதிவேற்றிய படிவத்தை ஏற்க ஏற்றுக்கொள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் / நிராகரி என்பதைத் தேர்ந்தெடுத்து படிவத்தை நிராகரிக்க நிராகரிப்பு கருத்துகளை வழங்கவும்.
குறிப்பு:
- நீங்கள் நிராகரிக்க தேர்வு செய்தால், தொடர்புடைய காரணத்தை நீங்கள் வழங்கலாம்.
- நிராகரிக்கப்பட்டவுடன், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தித் (SMS) தொடர்பு பட்டயக் கணக்கருக்கு (CA) மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணில் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களின் விவரங்களை வழங்குகிறது.
படி 5: ஏற்றுக்கொள் என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் பதிவேற்றிய படிவத்தைச் சரிபார்க்கக்கூடிய மின்னணு-சரிபார்ப்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
குறிப்பு: மேலும் அறிய மின்னணு-சரிபார்ப்பது எப்படி என்பதைப் பற்றிய பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
வெற்றிகரமான மின்னணு-சரிபார்ப்பிற்குப் பிறகு, ஒரு பரிவர்த்தனை அடையாளம் மற்றும் ஒப்புகை ரசீது எண்ணுடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். உங்கள் படிவத்தை வெற்றிகரமாக சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் பட்டயக் கணக்கரின் (CA) மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.