12A பிரிவின் கீழ் படிவம் 10A-க்கான பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை.
காலதாமதத்தை மன்னிக்கக் கோரும் படிவம் 10A u/s 12A FAQ
1. படிவம் 10A-க்கான காலதாமத மன்னிப்பு விண்ணப்பத்தை நான் ஆஃப்லைன் முறையில் தாக்கல் செய்ய முடியுமா?
இல்லை, படிவம் 10A-க்கான தாமத மன்னிப்பு விண்ணப்பத்தை ஆஃப்லைன் முறையில் தாக்கல் செய்ய முடியாது; இந்த வசதி ஆன்லைன் முறையில் மட்டுமே கிடைக்கும்.
2. தாமத மன்னிப்பு கோரிக்கையை தாக்கல் செய்யும்போது கட்டாயமாக இணைக்க வேண்டிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா?
வரி செலுத்துபவர் Sr no. 2(f) வினாவில் “இந்தப் படிவம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டதா?” என்பதற்கு ‘ஆம்’ என்று தேர்வு செய்தால், தாக்கல் செய்யப்பட்ட படிவத்தின் PDF-ஐ பதிவேற்றுவது கட்டாயமாகும்.
3. வரி செலுத்துபவர் தாக்கல் செய்யப்பட்ட தாமத மன்னிப்பு கோரிக்கை படிவத்தை எப்படி டவுண்லோடு செய்யலாம்?
பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கையை சமர்ப்பித்த வரி செலுத்துபவர், முகப்புப் பலகையில் சென்று அந்தப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்--> சேவைகள்--> பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை--> சட்டப்பூர்வ படிவங்களுக்கான விண்ணப்பம்--> சமர்ப்பிக்கப்பட்ட பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கைக்கு எதிரில் உள்ள "விவரங்களைக் காண்க" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்--> படிவத்தை பதிவிறக்கம் செய்ய பட்டனைக் கிளிக் செய்யவும்.
4. ஒரு வரி செலுத்துபவர் காலதாமத மன்னிப்பு கோரிக்கை படிவத்தின் அனுமதி அல்லது நிராகரிப்பு உத்தரவை எப்படிப் பார்க்கலாம்?
வரி செலுத்துபவர், ஒப்புதல் / நிராகரிப்பு ஆணையை கீழ்க்கண்ட வழிமுறையின் மூலம் அணுகலாம்:
முகப்புப் பலகை-->சேவைகள்-->காலதாமத மன்னிப்புக் கோரிக்கை-->சட்டப்பூர்வப் படிவங்களுக்கான படிவம்-->அனுமதிக்கப்பட்ட / நிராகரிக்கப்பட்ட காலதாமத மன்னிப்பு கோரிக்கை படிவத்தின் அருகில் உள்ள குறிப்பில் இடம்பெற்றுள்ள "இங்கே கிளிக் செய்யவும்" பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்-->தங்களின் தகவலுக்காக-->குறைதீர்ப்பு ஆணைப் பட்டனை பதிவிறக்கம் செய்யவும்.
5. ஒரு வரி செலுத்துபவர் பல காலதாமத மன்னிப்புக் கோரும் படிவத்தைத் தாக்கல் செய்ய முடியுமா?
ஆம், வரி செலுத்துவோர் வெவ்வேறு மதிப்பீட்டு ஆண்டுகள் (AY) மற்றும் பிரிவு குறியீடுகளின் சேர்க்கைகளுக்குப் பல மன்னிப்பு கோரும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய முடியும்.
6.காலதாமத மன்னிப்பு கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட பிறகு, படிவம் 10A-ஐ எவ்வாறு தாக்கல் செய்வது?
காலதாமத மன்னிப்பு கோரிக்கை விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, படிவம் 10A-ஐத் தாக்கல் செய்வதற்கு வரி செலுத்துபவர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்:
டேஷ்போர்டுக்கு செல்லவும்-->வருமான வரி படிவங்கள்--> வருமானவரி படிவத்தைத் தாக்கல் செய்யவும்-->
1961 ஆம் ஆண்டு வருமானவரிச் சட்டத்தின் கீழ் உள்ள படிவங்கள் -->பார்ம் 10A --> இப்போது தாக்கல் செய்யவும்
A)தாக்கல் செய்யும் வகையை 'மன்னிப்பு கோரிக்கை' என்றும், மன்னிப்பு வகையை 'ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மன்னிப்பு' என்றும் தேர்ந்தெடுக்கவும்.
B) “DIN எண்களைப் பெற” பட்டனைக் கிளிக் செய்யவும்.
C) அங்கீகரிக்கப்பட்ட தாமத மன்னிப்பு விண்ணப்பத்தின் DIN எண்கள்,கீழிறங்கும் பட்டியலில் காட்டப்படும்.
D) DIN எண்ணைத் தேர்ந்தெடுத்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட தாமத மன்னிப்பு DIN எண்ணிற்கு எதிராக, தாமத மன்னிப்பு ஆண்டு தானாகவே நிரப்பப்படும். நீங்கள் படிவம் 10A-ஐத் தாக்கல் செய்யத் தொடரலாம்.
குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட தாமத மன்னிப்பு கோரிக்கையுடன் இணைக்கப்பட்ட DIN எண்ணைப் பயன்படுத்தி ஒருமுறை படிவம் 10A தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், அந்தப் படிவத்தைத் திரும்பப் பெறுவதைத் தவிர, அதே DIN எண்ணைப் பயன்படுத்தி மீண்டும் தாக்கல் செய்ய முடியாது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டை பார்க்கவும்:

சொற்களஞ்சியம்
| சுருக்கப்பெயர்/ சுருக்கக் குறியீடு | விவரம்/முழு வடிவம் |
| AO | மதிப்பீட்டு அதிகாரி |
| AY | மதிப்பீட்டு ஆண்டு |
| CA | பட்டயக் கணக்காளர் |
| CPC | மத்திய செயலாக்க மையம் |
| EVC | மின்னணு சரிபார்ப்புக் குறியீடு |