Do not have an account?
Already have an account?

படிவம் 10BB (மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல்)

படிவம் 10BB (A.Y. 2023-24 முதல்) - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. மறு அறிவிப்பு செய்யப்பட்ட படிவம் 10BB எந்த மதிப்பீட்டு ஆண்டிலிருந்து பொருந்தும்?

21st பிப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 7/2023-ன் வாயிலாக அறிவிக்கப்பட்ட படிவம் 10BB, மதிப்பீட்டு ஆண்டு 2023–24 முதல் மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளுக்கு பொருந்தும்.

2.அறிவிப்பு எண் 7/2023 வெளியிடப்படுவதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு வந்த படிவம் 10BB, இன்னும் மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கிறதா?

ஏற்கனவே உள்ள படிவம் 10BB இணைய முகப்பில் கிடைக்கிறது; எனினும் இது மதிப்பீட்டு ஆண்டு 2022-23 வரை மட்டுமே பொருந்தும்.

மதிப்பீட்டு ஆண்டு 2022-23 வரையிலான தாக்கல்களுக்கு, படிவம் 10BB மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கிறது. அதை அணுக வேண்டிய வழிமுறை–

“மின்னணுத் தாக்கல்-----> வருமான வரி படிவங்கள்-----> வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்யவும்-----> வருமான வரிச் சட்டம், 1961-கீழ் உள்ள படிவங்கள் -----> CA-விடம் ஒப்படைப்பதற்கான படிவம் 10BB”.

அல்லது

மாற்றாக, இந்தப்படிவத்தை “எனது CA” செயல்பாட்டைப் பயன்படுத்தியும் ஒதுக்கலாம்.

3. அறிவிப்பு எண். 7/2023-இன் படி அறிவிக்கப்பட்ட படிவம் 10BB-ஐ ஒரு தணிக்கைக்கு உட்பட்டவர் எப்போது தாக்கல் செய்ய வேண்டும்?

மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தியாகும் பட்சத்தில், மறுஅறிவிப்பு செய்யப்பட்ட படிவம் 10B பொருந்தும்-

  1. குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறை/பிரிவின் விதிகளுக்குப் பொருந்தும் வகையில், எந்தவொரு விலக்கையும் அல்லது சலுகையையும் அளிப்பதற்கு முன்பாக, தணிக்கைக்கு உட்பட்டவரின் மொத்த வருமானம்-
  1. பிரிவு 10-இன், உட்பிரிவு 23C-இன் கீழ் வரும் துணைக் கூறுகள் (iv), (v), (vi) மற்றும் (via)
  2. சட்டத்தின் பிரிவுகள் 11 மற்றும் 12

கடந்த நிதியாண்டில் அதன் மொத்த வருமானம் ஐந்து கோடி ரூபாயை விட அதிகமாக இருந்தால

  1. கடந்த நிதியாண்டில் தணிக்கைக்கு உட்பட்டவர் ஏதேனும் வெளிநாட்டுப் பங்களிப்பைப் பெற்றிருந்தால்
  2. கடந்த ஆண்டில் தணிக்கைக்கு உட்படுபவர் தனது வருமானத்தின் எந்தவொரு பகுதியையும் இந்தியாவிற்கு வெளியே செலவிட்டுள்ளார்.

    மற்ற அனைத்து நிகழ்வுகளுக்கும், மறுஅறிவிப்பு செய்யப்பட்ட படிவம் எண் 10BB பொருந்தும்.

    மேலும் விவரங்களுக்கு, 1962-ஆம் ஆண்டின் வருமான வரி விதிகளின், விதி 16CC மற்றும் விதி 17B ஆகியவற்றைப் பார்க்கவும்.

4. மின்னணு தாக்கல் இணைய முகப்பில் படிவம் 10BB-ஐ (A.Y. 2023-24 முதல்) தாக்கல் செய்வதற்கான நடைமுறை என்ன

படிவம் 10BB-ஐ (மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல்) தாக்கல் செய்வதற்கான படிநிலைகள் பின்வருமாறு:

படிநிலை 1) வரி செலுத்துவோர் உள்நுழைவு: CA-வுக்கு படிவத்தை ஒதுக்குதல். இந்தப் படிவத்தை இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றின் வாயிலாக ஒதுக்கலாம்-

  1. மின்னணு-தாக்கல் -----> வருமான வரி படிவங்கள் -----> வருமான வரி படிவங்களை தாக்கல் செய் -----> வருமான வரி சட்டம் 1961-இன் படி உள்ள படிவங்கள் -----> படிவம் 10BB (A.Y. 2023-24 முதல்)
  2. அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளிகள் -----> எனது CA -----> CA-வைச் சேர்க்கவும் (ஏற்கனவே சேர்க்கப்படவில்லை எனில்)-----> வருமான வரி சட்டம் 1961-இன் படி உள்ள படிவங்கள் -----> படிவம் 10BB-ஐ (A.Y. 2023-24 முதல்) ஒதுக்கவும்

படிநிலை 2) CA உள்நுழைவு: CA ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டு, பணிப்பட்டியலில் உள்ள "உங்களது நடவடிக்கைக்காக" தாவல் வாயிலாக படிவத்தைப் பதிவேற்ற வேண்டும்.

படிநிலை 3) வரி செலுத்துவோர் உள்நுழைவு: பணிப்பட்டியலின் "உங்களது நடவடிக்கைக்காக" தாவல் மூலம் CA-வின் வாயிலாக பதிவேற்றிய படிவத்தை, வரி செலுத்துவோர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காலதாமதமாகப் படிவத்தைத் தாக்கல் செய்வதால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்க, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44AB இல் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட தேதிக்குள், அதாவது பிரிவு 139 இன் துணைப்பிரிவு (1)-இன் கீழ் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.

5. மேலே உள்ள கேள்வி எண். 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள "தணிக்கைக்கு உட்பட்டவர்" என்பவர் யார்?

இந்தச் சட்டத்தின் பிரிவு 10-இன் உட்பிரிவு (23C)-ன் துணைக் கூறுகள் (iv), (v), (vi) அல்லது (via)-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நிதி அல்லது நிறுவனம் அல்லது அறக்கட்டளை, அல்லது ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது இதர கல்வி நிறுவனம், அல்லது ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது இதர மருத்துவ நிறுவனம், அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவுகள் 11 அல்லது 12-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஓர் அறக்கட்டளை அல்லது நிறுவனம் ஆகியவை இந்தப்படிவத்தில் “தணிக்கைக்குட்பட்ட நிறுவனம் எனக் குறிப்பிடப்படுகின்றன.

6. மறுஅறிவிப்பு செய்யப்பட்ட படிவம் 10BB-ஐப் பொறுத்தவரை, கேள்வி எண். 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள "வெளிநாட்டுப் பங்களிப்பு" என்பதன் பொருள் என்ன?

விதி 16CC மற்றும் விதி 17B ஆகியவற்றைப் பொறுத்தவரை, 'வெளிநாட்டுப் பங்களிப்பு'என்ற சொல், வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 (2010-ஆம் ஆண்டின் சட்ட எண் 42)-இன் பிரிவு 2, உட்பிரிவு (1)-இன் கீழ் வரும் துணைக் கூறு (h)-இல் அதற்கு வழங்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.

7. படிவம் 10BB-ஐ(மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல்) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன?

படிவம் 10BB-ஆனது, பிரிவு 44AB-இல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு முன்னதாக, அதாவது பிரிவு 139(1)-இன் கீழ் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே தாக்கல் செய்யப்பட வேண்டும்.

8. படிவம் 10BB-இன் (A.Y 2023-24 முதல்) தாக்கல் எப்போது முழுமையானதாகக் கருதப்படும்?

CA பதிவேற்றிய படிவத்தை வரிசெலுத்துநர் ஏற்றுக்கொண்டு, மின்னணு வரித் தாக்கல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட செயலில் உள்ள DSC அல்லது EVC மூலம் அதனைச் சரிபார்த்த பின்னரே, படிவத்தின் தாக்கல் முழுமையானதாகக் கருதப்படும்.

9. படிவம் 10BB (A.Y 2023-24 முதல்)-ஐச் சரிபார்க்க என்னென்ன சரிபார்ப்பு முறைகள் கிடைக்கின்றன?

படிவம் 10BB (A.Y 2023-24 முதல்)-ஐச் சரிபார்க்கும் முறைகள்:

  • CA-க்களுக்குப் படிவத்தைப் பதிவேற்றுவதற்கு DSC மட்டுமே கிடைக்கும்.
  • நிறுவனங்கள் அல்லாத பிற வரி செலுத்துவோருக்கு (தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்கள்), CA-வால் பதிவேற்றிய படிவத்தை ஏற்றுக்கொள்வதற்கு DSC மற்றும் EVC ஆகிய இரண்டு விருப்பங்களும் கிடைக்கின்றன.
  • நிறுவனங்களுக்கு, CA-வால் பதிவேற்றப்பட்ட படிவத்தை ஏற்றுக்கொள்வதற்கு DSC விருப்பம் மட்டுமே கிடைக்கும்.

10.நான் கடந்த ஆண்டு படிவம் 10BB-ஐத் தாக்கல் செய்திருந்தேன். மதிப்பீட்டு ஆண்டு 2023-24 அல்லது அதற்குப் பிந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு, படிவம் 10B மற்றும் 10BB ஆகியவற்றில் எந்தப் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்?

வருமான வரித் திருத்த விதிகள் (3-வது திருத்தம்), 2023-ன் படி, விதி 16CC மற்றும் விதி 17B திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளில் எந்தப் படிவம் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல் படிவம் 10B மற்றும் 10BB ஆகியவற்றின் பயன்பாடானது, திருத்தப்பட்ட விதி 16CC மற்றும் விதி 17B ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

11. "விவரங்களைச் சேர்" மற்றும் "CSV கோப்பைப் பதிவேற்று" ஆகிய இரண்டு விருப்பங்களும் ஒன்றாக உள்ள அட்டவணைகளுக்கு அட்டவணைப் பட்டியல்களில் எவ்வாறு விவரங்களை வழங்குவது?

வரிசை எண் 23(vii), வரிசை எண் 23(viii) மற்றும் வரிசை எண் 32-இல் உள்ள அனைத்து அட்டவணைப்பட்டியல்களுக்கும், தயவுசெய்து பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:-

  1. 50 பதிவுகள் வரை: அட்டவணை விருப்பம் அல்லது CSV பதிவேற்ற விருப்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். இந்த இரண்டு வழிமுறைகளிலும், தரவுகள் அட்டவணையில் பிரதிபலிக்கும்.
  2. பதிவுகளின் எண்ணிக்கை 50-ஐத் தாண்டும் பட்சத்தில், CSV பதிவேற்ற விருப்பத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். இத்தரவுகள் CSV இணைப்பாக மட்டுமே காண்பிக்கப்படும்.
  3. CSV பதிவேற்ற விருப்பத்தைப் பயன்படுத்தும்போது, பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்:-

“எக்செல் டெம்ப்ளெட்டைப் பதிவிறக்கவும் → பதிவுகளைச் சேர்க்கவும் → எக்செல் டெம்ப்ளெட்டைப் .csv கோப்பாக மாற்றவும் → .csv கோப்பைப் பதிவேற்றவும்”

  1. CSV கோப்பு பதிவேற்றப்படும் ஒவ்வொரு முறையும், ஏற்கனவே உள்ள பதிவுகள்/தரவுகள் இருந்தால் அவை மேலெழுதப்படும். பழைய பதிவுகள் நீக்கப்பட்டு, சமீபத்தில் பதிவேற்றப்பட்ட CSV கோப்பில் உள்ள பதிவுகளே நடைமுறையில் இருக்கும்.

12. தாக்கல் செய்யப்பட்ட படிவம் 10BB-ஐ (மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல்) திருத்தி தாக்கல் செய்ய முடியுமா?

ஆம், தாக்கல் செய்யப்பட்ட படிவம் 10BB-ஐத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கான வசதி கிடைக்கிறது.

13.படிவத்தை நிரப்புவதற்கான வழிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் ஏதேனும் உள்ளனவா?

ஆம், CA ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டு, தனது ARCA உள்நுழைவின் வாயிலாகப் படிவத்தை நிரப்பும் செயல்முறையைத் தொடங்கியவுடன், படிவம் 10BB (மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல்) தொடர்பான பகுதிகள் காண்பிக்கப்படும் திரையின் மேற்பகுதியில் கிடைக்கும் “வழிமுறைக் கோப்பை” பதிவிறக்கம் செய்ய முடியும்.

குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், வழிமுறை கோப்பைப் பதிவிறக்கம் செய்யலாம்.

14. படிவத்தைத் தாக்கல் செய்யும் போது ஏதேனும் ஆவணங்களை இணைக்க வேண்டுமா?

ஆம், படிவத்தின் "இணைப்புகள்" பிரிவின் கீழ் பின்வரும் ஆவணங்களைக் கட்டாயமாக இணைக்க வேண்டும்:-

  1. வரவு-செலவுக் கணக்கு / இலாப-நட்டக் கணக்கு
  2. இருப்புநிலைக் கணக்கு

"இதர இணைப்புகள்” என்ற பெயரில் ஒரு விருப்பத்தேர்வு இணைப்பு வசதியும் உள்ளது. அங்கு நீங்கள் வேறு ஏதேனும் தொடர்புடைய பிற ஆவணங்களைத் தேவைக்கேற்ப இணைக்கலாம்.

ஒவ்வொரு இணைப்பின் அளவு 5MB-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பதைக் குறித்துக் கொள்ளவும். அனைத்து இணைப்புகளும் PDF/ZIP வடிவத்தில் மட்டுமே இருக்க வேண்டும். மேலும், ZIP கோப்பில் உள்ள அனைத்து கோப்புகளும் PDF வடிவிலேயே இருக்க வேண்டும்.

15. படிவம் 10BB-ஐ (மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல்) தாக்கல் செய்த பிறகு, தாக்கல் செய்யப்பட்ட படிவத்தின் விவரங்களை எங்கு பார்க்கலாம்?

வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ், CA மற்றும் வரி செலுத்துபவரின் உள்நுழைவில், மின்னணு-தாக்கல் தாவல் → வருமான வரிப் படிவங்கள் → தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்க என்பதன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட படிவங்களின் விவரங்களைக் காணலாம்.

16. படிவம் 10BB-யை (மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல்) ஆஃப்லைன் பயன்பாட்டுக்கு எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம்?

முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும் | வருமான வரித்துறை -----> பதிவிறக்கங்கள்-----> வருமான வரிப் படிவங்கள்-----> படிவம் 10BB (மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல்) -----> படிவ பயன்பாட்டுக் கருவி என்ற பாதையில் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

மாற்றாக, படிவத்தைப் பதிவேற்றும் போது , ஆஃப்லைன் தாக்கல் விருப்பத்தின் கீழ் உள்ள 'பதிவிறக்கு' பட்டனைக் கிளிக் செய்வதன் வாயிலாக CA இந்த வழிமுறையை அணுகலாம்.

குறிப்பு: மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கக்கூடிய அண்மைக்காலப் புதுப்பித்தப் பதிப்பு மென்பொருளை பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளவும்.

17. படிவம் 10BB-ஐ (மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல்)-ஐ ERI-கள், அதாவது மூன்றாம் தரப்பு மென்பொருட்கள் மூலமாகத் தாக்கல் செய்ய முடியுமா?

ஆம், இந்த படிவத்தை 'ஆஃப்லைன்'தாக்கல் முறையைப் பயன்படுத்தி ERI-கள் மூலமாகவும் தாக்கல் செய்ய முடியும்.

18. என்னுடைய வருமானம் அடிப்படை வரிவிலக்கு வரம்பிற்குக் கீழே இருந்தாலும், படிவம் 10BB-ஐ தாக்கல் செய்ய வேண்டுமா?

படிவம் 10BB-இன் பொருந்தக்கூடிய தன்மைக்கு, வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 10-ன் உட்பிரிவு (23C)-ன் பத்தாவது விதிவிலக்கின் கூறு (b) மற்றும் பிரிவு 12A(1)-ன் கூறு (b)-இன் துணைக் கூறு (ii) ஆகியவற்றை, வருமான வரி விதிகள், 1962-இன் விதி 16CC மற்றும் விதி 17B-உடன் இணைத்துப் பார்க்கவும்.

19.படிவம் 10BB-லுள்ள, 'கணக்காளரின் அறிக்கை' பிரிவின் கீழ், "சங்கம் / நிறுவனம் / இலாப நோக்மற்ற அமைப்பு / முதலியன" போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க எந்த விருப்பமும் இல்லை. அப்படியானால் நான் எந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

'கணக்காளரின் அறிக்கை' பிரிவின் கீழ், தணிக்கைக்கு உட்பட்டவரின் விவரங்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படிவம் 10BB-ல் பின்வரும் விருப்பத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன - நிதியம் , அறக்கட்டளை, நிறுவனம், பல்கலைக்கழகம் , இதர கல்வி நிறுவனம், மருத்துவமனை அல்லது இதர மருத்துவ நிறுவனம்.

தணிக்கைக்குட்பட்ட நிறுவனத்தின் தன்மைக்கு ஏற்ப, அதற்கு தற்காலிக/ அல்லது இறுதி பதிவு வழங்கப்பட்டுள்ள அமைப்பின் வகை, அமைப்பு மேற்கொள்ளும் செயல்பாடுகளின் தன்மை அல்லது அடிப்படையாகக் கொள்ளக்கூடிய பிற தொடர்புடைய காரணிகளின் அடிப்படையில் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

20. நான் படிவத்தைச் சமர்ப்பிக்கும்போது தோல்வி ஏற்படுகிறது.படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது, தவறான முழுப் பெயர், கொடி , உள்ளீடு, விழுக்காடு, பிளாட், முகவரி வரி மற்றும் பின்கோடு போன்ற பிழைகளை கணினி காட்டுகிறது. இப்பிரச்சினையைத் தீர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?

வரிசெலுத்துபவர் மற்றும் பட்டயக் கணக்காளர் ஆகியோரின் சுயவிவரங்களில், முக்கிய நபரின் விவரங்கள் உட்பட அனைத்து கட்டாயப் புலங்களும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்யவும். அவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, பழைய வரைவுப் பிரதியை நீக்கி, புதிய படிவத்தை உருவாக்கி மீண்டும் தாக்கல் செய்ய முயற்சிக்கவும்.

21.பிரிவு 13(3)-இல் குறிப்பிட்ட நபர்களின் விவரங்களை, பிரிவு 13(1)-ன் கூறு (c) அல்லது பிரிவு 13(2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்/அளவுகோல்கள் பொருந்தாத நிலையிலும், படிவம் 10BB-இன் வரிசை எண் 28-இல் கட்டாயமாக வழங்க வேண்டுமா?

வரிசை எண் 28-ல் கோரப்பட்டுள்ள குறிப்பிட்ட நபர்களின் விவரங்களை வழங்குவது கட்டாயமாகும். இது குறித்து மேலும் தெளிவுபெற, 9 அக்டோபர் 2023 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 17/2023-இல் நீங்கள் பார்க்கலாம்; மேலும், அந்த நபர்களைப் பற்றி தற்போது கிடைக்கக்கூடிய விவரங்களை வழங்கலாம்.

22. மதிப்பீட்டு ஆண்டு 2023-24 க்கான படிவம் 10BB-க்கு, UDIN-ஐ எவ்வாறு உருவாக்குவது?

மதிப்பீட்டு ஆண்டு 2023-24 முதல் நடைமுறைக்கு வந்துள்ள மறுஅறிவிப்பு செய்யப்பட்ட படிவம் 10BB-க்கான UDIN-ஐ உருவாக்க, "UDIN விவரங்களைப் பார்க்க/புதுப்பிக்கவும்" பக்கத்தில் படிவத்தின் பெயர், “படிவம் 10BB - பிரிவு 10(23C)(b)-இன் பத்தாவது விதிவிலக்கின் (iv)/(v)/(vi)/(via) துணைக் கூறுகள் மற்றும் பிரிவு 12A(1)(b)(ii)” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.