Do not have an account?
Already have an account?

படிவம் 52A

படிவம் 52A FAQ

1. மின்னணு-தாக்கல் படிவம் 52A-வை தாக்கல் செய்ய வேண்டியவர் யார்?

ஒரு நிதியாண்டின் முழுப் பகுதியிலோ அல்லது ஏதேனும் ஒரு பகுதியிலோ, ஒரு திரைப்படத் தயாரிப்பை மேற்கொள்பவர் அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர் அல்லது இவ்விரண்டையும் செய்பவர் எவராயினும், அத்தகைய தயாரிப்பு அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டிற்காகத் தம்மால் பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கும், ஒட்டுமொத்தமாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தம்மால் கொடுக்கப்பட்ட தொகை அல்லது தம்மால் கொடுக்கப்பட வேண்டிய தொகை என அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

2. குறிப்பிட்ட செயல்பாடுகள் என்றால் என்ன?

குறிப்பிட்ட செயல்பாடு என்பது, நிகழ்ச்சி மேலாண்மை, ஆவணப்படத் தயாரிப்பு, தொலைக்காட்சி அல்லது ஓடிடி தளங்கள் அல்லது அது போன்ற பிற தளங்களில் ஒளிபரப்புவதற்கான நிகழ்ச்சித் தயாரிப்பு, விளையாட்டு நிகழ்ச்சி மேலாண்மை, பிற நிகழ்த்து கலைகள் அல்லது மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பு வெளியிடுவதன் வாயிலாக இது தொடர்பாகக் குறிப்பிடும் மற்ற பிற செயல்பாட்டையும் குறிக்கும்.

3. படிவம் 52A-வை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன?

படிவம் 52A என்பது முந்தைய நிதியாண்டு முடிவடைந்ததில் இருந்து 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

4. படிவம் 52A-வை தாக்கல் செய்வதற்கான முன்நிபந்தனைகள் என்னென்ன?

படிவம் 52A தாக்கல் செய்வதற்கான முன்நிபந்தனைகள் பின்வருமாறு:

  • வரி செலுத்துவோர் கண்டிப்பாக PAN வைத்திருக்க வேண்டும்.
  • PAN பயன்பாட்டில் இருக்க வேண்டும் மற்றும் மின்னணு-தாக்கல் இணையமுகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

5. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் படிவம் 52A-வை தாக்கல் செய்வதற்கான நடைமுறை என்ன?

மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் படிவம் 52A-வை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:

படி 1: வரி செலுத்துவோர் தங்களது PAN ஐ பயனர் குறியீடாகப் பயன்படுத்தி வருமான வரி இணைய முகப்பில் அதாவது, www.incometax.gov.in உள்நுழைவு செய்ய வேண்டும்.

படிநிலை 2: மின்னணுத் தாக்கல் -> வருமான வரி படிவங்கள் -> வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்தல் -> வருமான வரிச் சட்டம் 1961-ன் படியுள்ள படிவங்கள் -> படிவம் 52A ஆகிய பக்கங்களுக்கு செல்ல வேண்டும்.

படிநிலை 3: “அடிப்படைத் தகவல்”, “பகுதி - A” , “பகுதி - B”, “சரிபார்ப்பு” ஆகிய 4 பிரிவுகளில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும், மேலும் தேவைப்படும் இடங்களில் CSV கோப்புகளையும் இணைக்க வேண்டும்.

படிநிலை 4: முன்னோட்டத் திரையில் விவரங்களைச் சரிபார்த்து, அனைத்து விவரங்களும் சரியாக வழங்கப்பட்டிருந்தால், படிவத்தை மின்னணு சரிபார்ப்பு செய்ய முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

6. படிவம் 52A-வை எவ்வாறு சரிபார்க்க வேண்டும்?

EVC அல்லது DSC-ஐப் பயன்படுத்தி படிவம் 52A-ஐ மின்னணு சரிபார்ப்பைச் சரிபார்க்கலாம்.

மேலும் அறிந்துகொள்ள, மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி (https://www.incometax.gov.in/iec/foportal/help/how-to-e-verify-your-e-filing-return) என்ற பயனர் கையேட்டைப் பார்க்கலாம்.

7. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் படிவம் 52A-வைத் தாக்கல் செய்ய எந்தெந்தத் தகவல்கள்/விவரங்கள் தேவை?

படிவம் 52A-வைத் தாக்கல் செய்ய பின்வரும் தகவல்கள்/விவரங்கள் தேவை:

  • கடந்த நிதியாண்டில் தயாரிக்கப்பட்ட அனைத்து திரைப்படங்கள் அல்லது மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட செயல்பாடுகள் அல்லது இரண்டின் விவரங்கள்; அதாவது தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர் அல்லது மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட செயல்பாட்டின் பெயர் அல்லது இரண்டுமே, தொடங்கப்பட்ட தேதி மற்றும் ஒருவேளை முடிவடைந்திருந்தால், அது நிறைவடைந்த தேதி போன்ற விவரங்கள்.
  • திரைப்படத் தயாரிப்பு அல்லது மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட செயல்பாடுகள் அல்லது இரண்டிலும் ஈடுபடுத்தப்பட்டதற்காக, ரூ. 50,000-க்கு மேல் பணம் செலுத்தப்பட்ட அல்லது செலுத்த வேண்டிய நபர்களின் பெயர், PAN, ஆதார் (கிடைக்கும் பட்சத்தில்) மற்றும் முகவரி விவரங்கள்.
  • அத்தகைய நபர்களுக்கு ரொக்கமாகச் செலுத்தப்பட்ட தொகை / ரொக்கம் தவிர்த்த பிற வழிகளில் செலுத்தப்பட்ட தொகை / செலுத்த வேண்டிய தொகை
  • அத்தகைய நபர்களுக்குச் செலுத்தப்பட்ட/செலுத்த வேண்டிய தொகையிலிருந்து மூலத்தில் பிடிக்கப்பட்ட வரி விவரங்கள்; அதாவது பிடிக்கப்பட்ட வரித் தொகை மற்றும் அது எந்தப் பிரிவின் கீழ் பிடிக்கப்பட்டது போன்ற விவரங்கள்.

8. படிவம் 52A-இன் பகுதி – A-வில் விவரங்களை நான் எவ்வாறு நிரப்ப வேண்டும்?

ஓர் ஆண்டில் திரைப்படங்கள் தயாரித்தல் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்ற விவரங்களை வழங்க வரி செலுத்துபவருக்கு 2 விருப்பங்கள் உள்ளன:

  1. விவரங்களைச் சேர்க்கவும்:
    • வரி செலுத்துபவர், தாங்கள் தயாரித்த திரைப்படங்களின் பெயர்கள் அல்லது மேற்கொண்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளை அட்டவணையில் கைமுறையாக குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு திரைப்படம் அல்லது குறிப்பிட்ட நடவடிக்கைக்கு தனித்தனி வரிசைகளைச் சேர்த்து இதனைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
    • அடிப்படைத் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் திரைப்படங்கள் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கான விவரங்களை உள்ளிட்ட பிறகு மட்டுமே, பகுதி – A-ஐச் சேமிப்பதற்கான “சேமி” பட்டன் செயல்பாட்டுக்கு வரும்.
    • பகுதி – A -இல் வழங்கப்பட்ட திரைப்படங்கள் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகளின் விவரங்கள் அடிப்படைத் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை மற்றும் விவரங்களுடன் சரிபார்க்கப்படும். அனைத்துத் திரைப்படங்கள் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கான விவரங்களை உள்ளிட்டவுடன், “விவரத்தைச் சேர்க்கவும்” பட்டன் செயலிழக்கச் செய்யப்படும். நீங்கள் கூடுதல் திரைப்படங்கள் அல்லது செயல்பாடுகளைச் சேர்க்க விரும்பினால், புதிய விவரங்களைச் சேர்க்க ஏதுவாக, முதலில் அடிப்படைத் தகவல் பகுதியில் எண்ணிக்கையைத் திருத்தம் செய்யவும்.
  1. CSV: ஐ சேர்க்கவும்
    • வரி செலுத்துபவர், தாங்கள் தயாரித்த திரைப்படங்களின் பெயர்கள் அல்லது மேற்கொண்ட குறிப்பிட்ட செயல்பாடுகளை எக்செல் டெம்ப்ளேட்டில் குறிப்பிட வேண்டும்.
    • எக்செல் டெம்ப்ளேட்டில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, அதை CSV கோப்பாக மாற்றி பின்னர் அந்த CSV கோப்பைப் பதிவேற்றவும்.
    • பதிவேற்றம் செய்யப்பட்ட CSV கோப்பு எந்தவிதமான பிழைகளும் இன்றி சரிபார்க்கப்பட்ட பிறகு, “சேமி” பட்டன் செயல்பாட்டுக்கு வரும்.

வரி செலுத்துவோர், சில திரைப்படங்கள் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கான விவரங்களைச் சேர்த்து அவற்றைச் சேமித்த பிறகு, மீண்டும் 'CSV கோப்பைச் சேர்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால் (அல்லது இதை மாற்றிச் செய்தாலும்), அதற்கு முன்பு தேர்ந்தெடுத்த விருப்பத்தின் கீழ் சேமிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ளவும். வரி செலுத்துவோர் மீண்டும் விவரங்களைப் பூர்த்தி செய்து, பகுதி- A-வைச் சேமிக்க வேண்டியிருக்கும்.

9. பகுதி - A க்கு CSV ஐப் பதிவேற்ற முயற்சிக்கும்போது எனக்கு பின்வரும் பிழைகள் ஏற்படுகின்றன. இதன் பொருள் என்ன, அதை நான் எவ்வாறு சரிசெய்வது?

வரிசை எண்

பிழைச் செய்தி

தீர்வு / எடுக்க வேண்டிய நடவடிக்கை

1.

CSV கோப்பில் உள்ளிடப்பட்டுள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை, அடிப்படைத் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இல்லை.

அடிப்படைத் தகவல் பலகையில் வழங்கப்பட்டுள்ள திரைப்படங்களின் எண்ணிக்கையும், திரைப்படங்களின் விவரங்களும் சமமாக இல்லாதபோது இந்தப் பிழைச் செய்தி தோன்றும். படிவத்தின் அடிப்படைத் தகவல் பலகையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள திரைப்படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து திரைப்படங்களின் விவரங்களையும் துல்லியமாக வழங்குவதை உறுதிசெய்து கொள்ளவும்.

2.

CSV கோப்பில் உள்ள குறிப்பிட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கை அடிப்படைத் தகவல் பலகையில் குறிப்பிட்டுள்ளபடி மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இல்லை.

அடிப்படைத் தகவல் பலகையில் வழங்கப்பட்டுள்ள திரைப்படங்களின் எண்ணிக்கையும், நீங்கள் சமர்ப்பித்த திரைப்படங்களின் விவரங்களும் சமமாக இல்லாதபோது இந்தத் பிழைச் செய்தி தோன்றும். படிவத்தின் அடிப்படைத் தகவல் பலகையில் உங்களால் அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட செயல்பாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அக்குறிப்பிட்ட அனைத்து செயல்பாடுகளின் விவரங்களையும் நீங்கள் முழுமையாக வழங்கியிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

CSV கோப்பில் தேவையான அனைத்து திருத்தங்களையும் செய்த பிறகு, அதை மீண்டும் பதிவேற்ற முயற்சிக்கலாம்.

 

 

10. பகுதி – B-விற்கான CSV கோப்பைப் பதிவேற்ற முயலும் போது, எனக்கு “பகுதி B CSV கோப்பில், தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு திரைப்படம்/ மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு எதிராகவும் குறைந்தது ஒரு பதிவாவது இருக்க வேண்டும்.” என்ற பிழை வருகிறது. இதன் பொருள் என்ன மற்றும் இதை நான் எவ்வாறு சரிசெய்ய வேண்டும்?

பின்வரும் 2 சூழ்நிலைகளில் இந்தப் பிழை செய்தி வரலாம்:

வரிசை எண்

சூழ்நிலை

தீர்வு / தேவைப்படும் நடவடிக்கை

1.

திரைப்படம்/ குறிப்பிடப்பட்ட செயல்பாட்டின் பெயர் பகுதி – A இல் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான விவரங்கள் பகுதி – B CSV இல் வழங்கப்படவில்லை.

திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கோ அல்லது மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கோ ரூ. 50,000-க்கு மேல் செலுத்தப்பட்ட தொகையின் விவரங்களுக்கு, குறைந்தபட்சம் ஒரு பதிவாவது இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பகுதி-A இல் குறிப்பிட்டுள்ள அனைத்து திரைப்படங்களுக்கும்/ குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கும் பகுதி-B CSV இல் உள்ள விவரங்களை வழங்குவதை உறுதிப்படுத்தவும்.

2.

திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கோ அல்லது மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கோ ரூ. 50,000-க்கு மேல் செலுத்தப்பட்ட தொகையின் விவரங்கள் பகுதி - B CSV கோப்பில் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் அந்தத் திரைப்படத்தின் பெயர் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டின் விவரம் பகுதி - A- இல் குறிப்பிடப்பட வில்லை.

பகுதி– A இல் குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்கள் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகளின் பெயர்கள், பகுதி– B இல் குறிப்பிடப்பட்டுள்ளதிரைப் படங்கள் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகளின் பெயர்களுடன் சரிபார்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அனைத்து திரைப்படங்களின் பெயர்கள் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகள் பகுதி - A மற்றும் பகுதி - B ஆகிய இரண்டிலும் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

11. அடிப்படை தகவல் பலகையில் நான் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால் பகுதி - A அல்லது பகுதி - B இல் இணைக்கப்பட்டுள்ள CSV ஏன் நீக்கப்படுகிறது?

தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் “அடிப்படைத் தகவல்”, “பகுதி - A” மற்றும் “பகுதி - B” ஆகிய மூன்று பலகைகளிலும் சரிபார்க்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க. வரி செலுத்துவோர் அடிப்படை தகவல் அல்லது பகுதி-A பலகையில் திரைப்படங்கள் அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகள் தொடர்பாக வழங்கப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள்/திருத்தங்களைச் செய்தால், பகுதி-A மற்றும் பகுதி-B இல் வரி செலுத்துவோரால் வழங்கப்பட்ட விவரங்கள் நீக்கப்படும்.

12. முந்தைய ஆண்டில் திரைப்படம் தயாரித்தல் அல்லது குறிப்பிட்ட செய்ல்பாடுகளை செய்ததற்கு நான் தனித்தனியாக படிவம் 52A ஐ தாக்கல் செய்ய வேண்டுமா?

இல்லை, கடந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அல்லது மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட செயல்பாட்டிற்கும் தனித்தனி படிவம் 52A தாக்கல் செய்யத் தேவையில்லை. ஒவ்வொரு TAN-க்கும் முந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட அனைத்து திரைப்படங்கள் மற்றும்/அல்லது மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கான விவரங்களை தொகுத்து, ஒவ்வொரு TAN பதிவுக்கும் தனித்தனியாக படிவம் 52A ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

13.பகுதி – A அல்லது பகுதி - B-யில் CSV கோப்பைப் பதிவேற்றிய பிறகு எனக்குப் கோப்பு பிழை என வருகிறது, ஏன்?

பகுதி-A அல்லது பகுதி-B இல் CSV ஐ பதிவேற்றிய பிறகு, வழங்கப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்படும். ஏதேனும் பிழைகள் காணப்பட்டால், பிழைகளின் விவரங்கள் உங்களுக்கு எக்செல் கோப்பில் வழங்கப்படும். குறிப்பிடப்பட்டுள்ள வரிசைகளில் ஏற்பட்டுள்ள பிழைகளை எக்செல் கோப்பில் பார்த்து அவற்றைச் சரிசெய்யவும். தேவையான அனைத்து திருத்தங்களையும் செய்த பிறகு, அதை மீண்டும் பதிவேற்ற முயற்சிக்கலாம்.

ஒவ்வொரு துறைக்கும் கட்டாயமாகத் தேவைப்படும் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வடிவங்களின் விவரங்களுக்கு பகுதி –A மற்றும் பகுதி –B ஆகிய இரண்டிலும் கொடுக்கப்பட்டுள்ள CSV வழிமுறைக் கோப்புகளைப் பார்க்கவும்.