Do not have an account?
Already have an account?

1. கண்ணோட்டம்

புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு முறையே வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு-115BAA மற்றும் 115BAB-இன் கீழ் 15% (கூடுதலாக பொருந்தக்கூடிய மேல்வரி மற்றும் வரியின் மீதான தீர்வை) சலுகை வரி விகிதத்தில் வரி செலுத்த விருப்பத் தேர்வு உள்ளது. நிறுவனங்கள் 2020-21 மதிப்பீட்டு ஆண்டு முதல் சலுகை வரி விகிதங்களைத் தேர்வு செய்யலாம்.

சலுகை வரி விகிதங்களைத் தேர்வுசெய்ய, பிரிவு-115BAB-ன்படி வரி செலுத்த, 2020 ஏப்ரல் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் முதல் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிப் படிவத்தை அளிப்பதற்காக பிரிவு-139-ன் துணைப்பிரிவு-(1)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் அல்லது அதற்கு முன் நன்மைகளைப் பெற படிவம்- 10-ID-ஐத் தாக்கல் செய்வது அவசியம். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட அத்தகைய விருப்பம் அடுத்தடுத்த மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு பொருந்தும். அதைத் திரும்பப் பெற முடியாது.

படிவம்-10-ID-ஐ ஆன்லைன் முறை மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்

  • செல்லுபடியாகும் பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல்லுடன் மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயனர்
  • செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள மின்னணுக் கையொப்பச் சான்றிதழ் (DSC) (மின்னணு-சரிபார்க்க)
  • பயனர் ஒரு புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனம்
  • இணைக்கப்பட்ட தேதி 2019 அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னரோ, 2023 மார்ச் 31 ஆம் தேதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ உள்ளது
  • கடந்த மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரிப் படிவம் தாக்கல் செய்யவில்லை
  • சட்ட ம் 139(1) பிரிவின் கீழ் வருமான வரிப் படிவம் அளிப்பதற்கான காலக்கெடு முடிவடையவில்லை

3. படிவத்தைப் பற்றி

3.1 நோக்கம்

வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு-115BAB-ன் படி, புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கு உட்பட்டு, 15% (கூடுதலாக மேல்வரி மற்றும் வரியின் மீதான தீர்வை) குறைக்கப்பட்ட வரி விகிதத்தில் வரி செலுத்தும் விருப்பத் தேர்வைப் பயன்படுத்தலாம்.

முந்தைய ஆண்டில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனம் தவறிவிட்டால், அந்த முந்தைய ஆண்டு மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளைப் பொறுத்தவரை அந்த விருப்பம் செல்லாததாகிவிடும், மேலும் சட்டத்தின் பிற விதிகள் மட்டுமே முந்தைய ஆண்டு மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறுவனத்திற்குப் பொருந்தும்.

3.2 இதை யார் பயன்படுத்தலாம்?

புதிய உற்பத்தி உள்நாட்டு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட 2019 அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு இணைக்கப்பட்டு, 2023 மார்ச் 31 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் ஒரு தயாரிப்பை அல்லது ஒரு பொருளை உற்பத்தி செய்யத் தொடங்கிய .அனைத்துப் பயனர்களும்.

4. ஒரு விரைவான பார்வையில் படிவம்

படிவம் 10-ID மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது:

  1. வருமான மதிப்பீட்டு அதிகாரிகளின் விவரங்கள்
  2. அடிப்படைத் தகவல்
  3. சரிபார்ப்பு
 
Data responsive


4.1 வருமான மதிப்பீட்டு அதிகாரியின் விவரங்கள்

முதல் பிரிவில் உங்கள் வருமான மதிப்பீட்டு அதிகாரியின் விவரங்கள் உள்ளன. பக்கத்தில் காட்டப்படும் வருமான மதிப்பீட்டு அதிகாரியின் விவரங்களை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

Data responsive


4.2 அடிப்படைத் தகவல்

அடுத்த பிரிவில் உள்நாட்டு நிறுவனத்தின் அடிப்படை விவரங்கள் (தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் தன்மை உட்பட) உள்ளன.உற்பத்தியின் தொடக்க தேதியையும், உங்களுக்கு பொருந்தக்கூடிய வணிகத்தின் விவரங்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Data responsive


4.3 சரிபார்ப்பு

இறுதிப் பிரிவில் வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு-115BAB-ன்படி அளவுகோல்களைக் கொண்ட சுய அறிவிப்பு படிவம் உள்ளது. சரிபார்ப்பு பக்கத்தில் காட்டப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்படுங்கள்.

 
Data responsive


5. எப்படி அணுகுவது மற்றும் சமர்ப்பிப்பது

பின்வரும் முறைகள் மூலம் நீங்கள் படிவம்- 10-ID-ஐப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்:

  • ஆன்லைன் முறை - மின்னணுத் தாக்கல் இணைய முகப்பு மூலம்

ஆன்லைன் முறை மூலம் படிவம்- 10-ID-ஐ நிரப்ப மற்றும் சமர்ப்பிக்கப் பின்வரும் படிகளைப் பின்பற்றவும்.

5.1 படிவம்-10-ID-ஐ சமர்ப்பித்தல் (ஆன்லைன் பயன்முறை)

படி 1: உங்கள் பயனர் அடையாளம் (ID) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு முகப்பில் உள்நுழையவும்.

Data responsive


படி 2: உங்கள் முகப்புப் பலகையில் , மின்னணுத் தாக்கல் >வருமான வரி படிவங்கள்> வருமான வரி படிவங்களை தாக்கல் செய்யுங்கள் என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


படி 3: வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்தல் பக்கத்தில், படிவம்-10-ID-ஐத் தேர்ந்தெடுக்கவும்.மாற்றாக, படிவத்தைத் தாக்கல் செய்ய தேடல் பெட்டியில் படிவம்-10-ID-ஐ உள்ளிடவும்.

Data responsive


படி 4: படிவம்-10-ID பக்கத்தில், மதிப்பீட்டு ஆண்டைத் (A.Y.) தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


படி 5: வழிமுறைகள் பக்கத்தில், தொடங்கு என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


படி 6: தொடங்கு என்பதைச் சொடுக்கினால், படிவம்-10-ID காட்டப்படும். தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பி முன்னோட்டம் என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


படி 7: முன்னோட்டம் பக்கத்தில், விவரங்களைச் சரிபார்த்து, மின்னணு-சரிபார்ப்புக்கு தொடரவும் என்பதைச் சொடுக்குக.

Data responsive


படி 8: சமர்ப்பிக்க ஆம் என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


படி 9: ஆம் என்பதைச் சொடுக்கினால், நீங்கள் மின்னணுக் கையொப்பச் சான்றிதழைப் பயன்படுத்தி சரிபார்க்கக்கூடிய மின்னணு-சரிபார்ப்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

குறிப்பு: எப்படி மின்னணு சரிபார்ப்பது என்பதைப் பற்றி மேலும் அறிய பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

வெற்றிகரமான மின்னணு-சரிபார்ப்பிற்குப் பிறகு, ஒரு பரிவர்த்தனை அடையாளம் மற்றும் ஒப்புகை ரசீது எண்ணுடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். எதிர்கால குறிப்புக்காக பரிவர்த்தனை அடையாளம் (ID) மற்றும் ஒப்புகைக் குறிப்பு எண்ணை குறித்துக் கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணிலும் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.

 
Data responsive

 

6. தொடர்புடைய தலைப்புகள்